அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/8/13

சீராப்பள்ளி தேவாங்கர் அராயிச்சி மையம் சார்பாக நடைபெற்ற விழா

வாழ்த்துக்கள் மேலும் உங்கள் சேவை தொடர அம்மன் அருள் புரியட்டும் .
---நன்றி DR&DC(Devanga Research and development Centre) சீராப்பள்ளி

 

103 .தேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தவனதவரு :- தவனம் - மருக்கொழுந்தால் வழிபாடு செய்பவர். 
மோஹனதவரு :- மோகனமாக வாழ்ந்தவர். 
ராகதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் மஹாஜோதி என்னும் ராக தீபம் எடுப்பவர். 
திலகதவரு :- நெற்றியில் கஸ்தூரித் திலகம் அணிபவர். 
சிம்மாசனதவரு :- தேவாங்க சிம்மாசனங்கள் நான்கில், ஒரு சிம்மாசனத்திற்கு அதிபதியான உரிமை பெற்றவர். 
சிம்மாசனங்கள் நான்காவன :- 
1. ஷகர சிம்மாசனம் 
2. மொதனூரு சிம்மாசனம் 
3. பெனுகொண்டா சிம்மாசனம் 
4. படவீடு சிம்மாசனம் என்பனவாம். 
ஷகர சிம்மாசனம் ஸ்ரீ காசிகுரு பீடத்திற்கும். மொதனூரு சிம்மாசனம் ஸ்ரீ சைலகுரு பீடத்திற்கும் , பெனுகொண்டா சிம்மாசனம் ஸ்ரீ ஹேமகூடகுரு பீடத்திற்கும் , படவீடு சிம்மாசனம் ஸ்ரீ ஸோணாசல குரு பீடத்திற்கும் உரியனவாம். ஸ்ரீ சம்புசைல குரு பீடத்திற்குச் சிம்மாசனம் இல்லை. காரணம் இக்குரு பீடம் மட்டும் சன்யாச ஆசிரமத்திற்கு உரியது. இல்லறவாசிகள் மற்ற குரு பீடங்களில் குருமார்களாக இருந்து வந்தனர். 
லிங்கதவரு :- லிங்கதீட்சை பெற்றவர்.