அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.
Showing posts with label ஒலி/ஒளி தொகுப்பு. Show all posts
Showing posts with label ஒலி/ஒளி தொகுப்பு. Show all posts

6/19/14

ஸ்ரீ இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் மங்கள பாடல்கள்

 ஸ்ரீ இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் மங்கள பாடல்கள்

 

 

 

 

 

 

 

 

மங்களப் பாடல் - 1

 பாலிலே அபிஷேகம்
 பழத்திலே அபிஷேகம்
 தேனிலே அபிஷேகம்  தேவர்களுக்கு
 எள்ளிலே அபிஷேகம்
 எண்ணாயிரம்  காணிக்கை சௌடேஸ்வரிக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம் 

மங்களப் பாடல் - 2

 அசுரன நரவெத்தி
 அலெயனு கூண்ட்டனு மாடி
 நிரவு மந்தாரா கிரியெல்லி
 நீண்ட்டு மக்கான ஊடி
 உலவு தேவாங்கனியே
 ஓப்பு சாமுண்டேஸ்வரி
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 3

 அந்தி மல்லிகை மலர்
 அருளி செந்தா மலர்
 கொத்து மாமரிக் கொளுந்து
 குமு குமுகுமுங்கவே
 அந்த மலர் வாசங்கள்
 எங்கெங்கு மணக்குமோ
 தந்தையுடன் நடராஜன் தமயந்திக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 4

 அச்சுநா நத்தனுக்கு
 அமுத பார்வதி கௌரி
 கச்சத்துடன் நகையணிந்து
 கல்யாணக் கோலம் கொண்டு
 ரங்கனி துடாங்கனி ரதிசுவனக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 5

 அஞ்சு சீர் அருள் பெட்டி
 அரிய செம்பலு பெட்டி
 ஆளாத்தி கேசெம்பு சேத்தப் பெட்டி
 இந்திரண்டு செல்வேடு
 அந்திரெண்டு பொய்வேடு
 பந்த கஸ்தூரி பல பொட்டு பெட்டி
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 6

 சரஸ்வதிக்கும் பார்வதிக்கும்
 சம பூமி லட்சுமிக்கும் அனுதினமும்
 துதி செய்ய அருள் ஜோதிக்கு
 மகாலட்சுமி வாரார்னு
 மங்களம் பாடவே சௌடேஸ்வரிக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 7

 சின்ன சின்ன சொம்புலு
 சிவகஞ்சி தீர்த்தமுலு
 அப்புரஞ்சி ஜமுக்காள அம்மனுக்கு
 செல்லின கந்தமுலு
 செமந்திய புஸ்மமுலு
 தல்லி சாமுண்டியே
 நீ கார்த்தியுலு
 சதிபதி கூடவே யித்து
 நீ நோடு பேக்கம்மா
 சௌடேஸ்வரிக்கு
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 8

 தேவாங்க குல தெய்வதாயியெ
 தேவல முனின காப்பாடிதவளியெ
 தேவாங்க குலன காப்பாடு பவளியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 9

 கைலாச வாசவியெ
 கையல்லி திரி சூல தவளியெ
 கேளிதவர கொடுவ அம்மனியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 10

 மங்கள மங்கள ஸ்ரீ சௌடேஸ்வரியெ
 சாந்த ரூபி சூடாம்பிகெயெ
 ஆதிவீர சாமுண்டீஸ்வரியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 11

 பேரூரு விளங்கவே
 பெரிய தேரோடவே
 தெப்பத்தேரோடவே
 திருநாட்டியம் ஆடவே
 ஜனங்கள் கூடவே
 திருவிழா கொண்டாடவே
 அருள்மிகுபட்டீஸ்வரருக்கு
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

பாடல் -12

 சௌடேஸ்வரியை நாம் தொழுதால்
 சுகம் எல்லாமே தேடி வரும்
 அந்த நாயகியை நினைத்திருந்தால்
 நலம் யாவும் நாடி வரும் (சௌ)
 தேவாங்கர் குலம் விளங்க
 தேவியவள் அருள் தருவாள்
 தேடி தினம் துணை கொள்வோம்
 தேவியவள் திருப்பாதம் (சௌ)
 ஆலயம் பல இருந்தும் கோவில் செல்ல 
 மனம் இல்லையோ
 படைத்தவள் நினைவில்லையோ (சௌ)
 ஆதி சிவன் மேனியில் பாதிசக்தி
 ஆனவளாம் பாடி தினம் பணிந்திடுவோம்
 பாரினில் அவள் புகழை 
 சௌடேஸ்வரியை நாம்
 தொழுவோம்.
 
 
நன்றி devangakula.org 

6/6/14

கதை சொல்லும் திருவிழா!

கதை சொல்லும் சவுண்டாத்தா திருவிழா!




        பாட்டன் முப்பாட்டன் சொன்ன செவிவழிக் கதைகளும், அதையட்டிய வில்லுப் பாட்டும், கணியன் பாட்டும் ஆயிரமாயிரம் நீதி சொல்லும் நம் வாழ்க்கைக்கு! அப்படி ஒரு தெய்வக் கதையோடு துவங்குகிறது ஒரு திருவிழா! ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது தாசப்பக்கவுடர்புதூர் (நால்ரோடு). மக்கள் குடியிருக்க வசதியாக தாசப்பக்கவுடர் என்பவர் தன் நிலத்தை தானமாகத் தந்தாராம். அவருடைய பெயரிலேயே திகழ்கிறது இந்த ஊர்! இந்த ஊரின் மையத்தில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கும் ஸ்ரீராமலிங்கேஸ்வரருக்கும்தான் கதை சொல்லி திருவிழா நடத்துகிறார்கள்.



இந்தக் கோயிலில், தைப்பொங்கல் விசேஷம்! விழாவின் ஓர் அங்கமாக... அன்று காலை, கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது, 'சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா... பாம்மா... பாதாயே’ எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, கூடவே ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வரும் இளைஞர்கள் (வேண்டிக் கொள்பவர்கள் மட்டும்), தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தி போட்டபடி, நெசவாளர்கள் உருவான கதையை பாடலாகப் பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்களாம்!



ஆதிகாலத்தில் தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் அனைவரும் ஆடையின்றி அவதிக்குள்ளானார்களாம். ஆகவே, எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஈசனிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்ட சிவபெருமானும், தன் அங்கத்திலிருந்து ஜோதி பிரகாசத்துடன் தேவல முனிவரைத் தோற்றுவித்து, ''மகாவிஷ்ணுவின் உந்தித் தாமரை நூலை வாங்கி வந்து, இவர் களுக்கு ஆடை தயார் செய்து கொடு'' என்று பணித்தாராம்.




அதன்படியே தேவல முனிவர், மகாவிஷ்ணு வைத் தரிசித்து உந்தித் தாமரை நூல் பெற்றுத் திரும்பும் வழியில் அசுரர்கள் அவரைப் பிடித்து துன்புறுத்தினர். அவர் அம்பிகையைப் பிரார்த்தித்து அபயக்குரல் எழுப்பினார். அக்கணமே சிம்மவாகினியாகத் தோன்றிய அம்பிகை அசுரர்களை வதம் செய்தாளாம்.

       அப்படிப் போரிடும்போது அசுரர்களின் ரத்தத் துளிகளில் இருந்து புதிது புதிதாக அசுரர்கள் உருவாக, அசுரர்கள் சிந்தும் ரத்தத்தைப் பருகும்படி சிம்மத்துக்குக் கட்டளையிட்டாள் அம்பிகை. சிம்மமும் அப்படியே செய்தது. ஆனாலும் போரின் இறுதியில், சிம்ம வாகனத்தின் காது மடல்களில் இருந்த ரத்தத் துளிகள்...அசுரகுணம் நீங்கப் பெற்று மனிதர்களாக உருப்பெற்றன! அவர்களை, தேவல முனிவருக்கு உதவியாக இருக்கும்படி ஆணையிட்டுச் சென்றாளாம் அம்பிகை.



தேவல முனிவரும் உந்தித் தாமரை நூலினால் அனைவருக்கும் ஆடைகள் நெய்து கொடுத்தார். இவரின் வழிவந்தவர்களே, ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் (சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர்) எனவும், இவர்களின் நெசவுத் தொழிலுக்கு உதவியாக இருப்பவர்கள் சிங்குதாரர்கள் எனவும் சொல்கிறது அந்தக் கதை!

இங்கு வந்து அம்மனுக்குப் புடவை சார்த்தி வழிபட்டால், நமது குறைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும், 'கல்யாணத் தடை அகலவும், குழந்தைப்பேறு வாய்க்கவும் ஸ்ரீசௌடேஸ்வரி அம்மனை மனதார வேண்டிக் கிட்டா, எல்லா வரமும் கைகூடும்’ என்கிறார்கள் அம்பாளின் திருவருளை அனுபவத்தில் உணர்ந்த பக்தர்கள்.



"நெசவாளர்களின் வாழ்வைக் காக்கும் அந்த அம்பிகையை நாமும் வழிபடுவோம்; நம் தொழில் சிறக்கவும் குலம் செழிக்கவும் அருள்புரிவாள் ஸ்ரீசௌடேஸ்வரி!"



நன்றி சக்தி விகடன் 


6/4/14

பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா

 பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா

பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா
விஜயதசமி அன்று காலை அம்மன் "சக்தி அழைப்பு" மற்றும் "தண்டிலி நீரு கொம்பராது" ... பகுதி ஒன்று அம்மன் சக்தி தொட்டு விநாயகர்  கோவிலில் இருந்து அலகு சேவையுடன் புறப்பாடு....



பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா--2
சக்தி , ராகு ஜோதி , மற்றும் "தண்டுலி கொம்பந்த நீரு" தண்டில் கொண்டுவரப்பட்ட நீர் கோவில் கருவறை அடைந்தவுடன் அம்மனுக்கு மஹா தீபாராதனை...

"தண்டுலி நீரு கொம்பராது " என்றால் சக்தி நிலை நிறுத்துவதை போல அதிசயமான நிகழ்வுதான்... கீழே உள்ள வீடியோவில் கோவில் கருவறையில் அம்மனுக்கு மேல் ஊஞ்சல் போல அலங்காரம் உள்ளதா? அது தான் ஒரு தண்டில் வாழைக்காயை கட்டி விடுவார்கள் பின் அதில் குறுக்காக இரண்டு கத்திகள் சொருகப்படும். பின் கீழே உள்ள கத்தியில் பல நூல்களை சுற்றி அதில் நல்ல கனமான கும்பம் (நீருடன்) வைக்கப்படும். அனால் அந்த பாரம் தங்காமல் அந்த வாழைக்காய் எதுவும் ஆகாமல் அப்படியே ஊர் சுற்றிவந்து இப்படி கோவில் கருவறையில் மாட்டி விடுவார்கள்... பின் ராகு ஜோதி வந்து கோவில் சேரும் வரை அப்படியே இருக்கும். ......
காணக்கிடைக்காத காட்சி கண்டு மகிழவும்...


பெரிய நெகமம் இராகு ஜோதி அழைப்பு
சக்தி அழைப்பு முடிந்தவுடன் மஹா ஜோதியாக அம்மன் பெரியவீட்டு இருமனேர் குலத்தாரால் ... மெரவுணை பண்டைய முறைப்படி மாத்து (அகசரு மாத்து )மீது நகர்வலம் வந்து கோவில் அடைதல்



பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா - அம்பு சேவை

ஒன்பது நாள் ஓம்கார கொலுவிருந்த நம் அன்னை பத்தாம் நாள் விஜயதசமி நாளில் மாலை அம்மன் சிம்மாவாகனம் ஏறி .. அசுரவதம் செய்வதாக ஐதீகம். அதை தான் நாம் அம்பு சேவை (அம்பு ஆக்காது / வன்னிமர குச்சாது) என்று அழைக்கிறோம்.
ஒரு பொது இடத்தில் பெரிய வாழை மரம் நட்டு அதில் வன்னிமர கொத்து ஒரு துண்டில் காணிக்கையுடன் கட்டப்பட்டிருக்கும் பின் அம்மன் சிங்க வாகனத்தில் கோவிலில் இருந்து ஆக்ரோஷமாக வில் அம்புடன் வந்து அசுரவதம் செய்கிறார்.

அம்மன் அசுரவதம் முடிந்தவுடன் அந்த வன்னிமர இலையை அனைவரும் போட்டி போட்டுகொண்டு எடுத்து சென்று வீட்டில் பத்திரப் படுத்தி வைத்து கொள்வார்கள். அது கிடைத்தால் அன்னை அருள் கிடைத்தது போல் மெய் சிலிர்ப்பார்கள்.... பின் அம்மன் மண்டகபடிக்கு எழுந்தருளி பானகம் நிவேதனம் செயப்படும்.


 இவ்வாறு தான் கோவை மாவட்ட நெசவாளர் கிராமங்களில் சவுண்டம்மன் அப்ப (பண்டிகை) கோலாகலமாக அலகுவீரர்களின் வீரமிகு அலகுசேவையுடன்  சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த வீடியோ தொக்குக்க உதவிய பெரியநெகமம் செல்வன்.துரை  அவர்களுக்கு நன்றிகள்
  

3/9/14

"தேவாங்க குல தேவதே "கன்னட ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பக்தி பாடல்கள் ( தூய கன்னடம் )

"தேவாங்க குல தேவதே "

கன்னட ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பக்தி பாடல்கள்
 ( தூய கன்னடம் )

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பக்தி பாடல்கள் கன்னட மொழியில் மிகவும் அருமையாக உள்ளது அனைவரும் கேட்டு மகிழவும் ....... தூய கன்னடத்தில் உள்ளது . பாடல் வரிகளின் முதல் அடி தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .. கேட்டு அன்னை சௌடேஸ்வரி யின் அருள் பெருக.....

முகப்பு 
தேவாங்க புராணம் 
ஜெகவெல்ல நினதே தாயே 
தேவாங்க குலதா தேவதை ஆகி
வஸ்தர நெய்யுவ யோகி 
எஷ்ட்டொந்து ரூபவோ
ஆரத்தி ஜெயமங்களா 
தேரு பருத்திதே.. 
ஜெய மங்களம் நித்ய சுப மங்களம்   மங்கள பாடல்



2/23/14

பத்தேவு / தண்டகம் கூறி அம்மனை அழைக்கும் காட்சி

சௌண்டம்மன் மீது அன்பு கொண்டு வீராவேசமாக ரதி சேர்க்கும் பொழுது   உரிமையுடன் பத்தேவு / தண்டகம்  கூறி அம்மனை அழைக்கும் காட்சி அனைவரும் கண்டு மகிழவும்.

பத்தேவு கூறும் அலகுவீரர்/வீரகுமாரர்  செல்வன். கல்யாண குமார் , அருப்புகோட்டை

பதிவு செய்த திருவிழா : ஓடை சௌடேஸ்வரி அம்மன் கோவில் கரக மகோத்சவம். அருப்புகோட்டை

பதிவு செய்தது : ஓபுளி ராஜ் , சேலம்.

http://www.youtube.com/watch?v=D7ypcg8GxvQ 

10/26/13

"சௌடேஸ்வரி சரணம்" - சௌண்டம்மன் பக்தி பாடல்கள்

                                                                "சௌடேஸ்வரி சரணம்"
மிகவும் பழமையான சௌண்டம்மன் பாடல்கள் . திருமூர்த்தி மலை காயத்ரி பீடத்தில் வெளியிடப்பட்ட இசை நாடா.....
இயக்கம் : திரு பாக்யராஜ் , பொள்ளாச்சி.
 

10/16/13

பொள்ளாச்சி சௌண்டம்மன் அப்ப வீடியோ காட்சிகள்

பொள்ளாச்சி சௌண்டம்மன் அப்ப  2013 வீடியோ காட்சிகள் 
சம்ஹாரம் செய்ய அம்மன் பெட்டது சௌண்டம்மன் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி யாக  வில் அம்புடன் ...... சங்குநாதம் சேய..... சிம்மாவாகனம் ஏறியவுடன் சிவப்ரகாசம் சாஸ்த்ரிகள் தண்டகம் கூறிய காட்சி
 
நவராத்ரியின் முக்கிய நிகழ்வான அம்பு சேவை என்னும் அம்பு போடுதல் (அசுர வதம் )
 
பொம்மை கொலு 
 
சௌண்டம்மன் காய்கறி அலங்காரம்

10/9/13

சித்தையன்கோட்டை சஞ்சீவி சௌண்டம்மன் ஆலயம்






சித்தையன்கோட்டை சஞ்சீவி சௌண்டம்மன் ஆலயம் 

கோவிலில் சிலை இல்லை அம்மன் சிரசு  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது 
சித்தையன்கோட்டை  , திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு
 இங்கு நெசவாளர் வாழும் கிராமம் சித்தையன்கோட்டை இங்கு சஞ்சீவி சௌண்டம்மன் ஆலயம் உள்ளது இங்கு பலநூறு வருடம் முன்பு நடந்த உண்மை சம்பவம் ...
கோவிலில் சிலை இல்லை அம்மன் சிரசு  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது !!!!
இந்த வீடியோ பதிவுகள் சில வருடங்கள் முன்பு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது அதன் தொகுப்பு.

இந்த கோவில் தேவாங்க  சமூகம் கப்பேலார் வங்குச தயாதிகளுக்கு பாத்தியப்பட்டது.

part 1:
 

part 2:

 
part 3:
 

part 4:
 

விஜய் தொலைக்காட்சி "நடந்தது என்ன ? " குழுவினருக்கு நன்றிகள்
இந்த வீடியோ பதிவுகளை நமக்கு அனுப்பிய செல்வன் .வினோத் தியாகராஜன்  அவர்களுக்கு நன்றி .





9/22/13

சென்னை குன்றத்தூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா

சென்னை குன்றத்தூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா புகைப்படங்கள்.
இந்த புகைப்படங்களை நமக்கு அனுப்பிய திரு சிவச்சந்திரன் ரங்கநாதன் புஞ்சை புளியம்பட்டி, அவர்களுக்கு நன்றி.






















விழாவை சிறப்பாக நடத்திய சென்னை தேவாங்க மகாஜன சபை மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள்  அனைவருக்கும் நன்றிகள்.


8/10/13

ஹொசகோட்டை ஸ்தல சௌடேஸ்வரி அம்மன் அமாவாசை திருவிழா

ஹொசகோட்டை ஸ்தல  சௌடேஸ்வரி அம்மன் அமாவாசை திருவிழா புகைப்படங்கள் :


ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி  அம்மனுக்கு திருமஞ்சனம் கொண்டுவரும் காட்சி





ஸ்ரீ சக்தி அழைப்பு  



சக்தி அழைக்க சேலம் குகை தோட்டப்ப  2013 செட்டிகாரர்
 Dr திரு.வெங்கடேசன்   அவர்கள் அம்மனை எடுத்து வருதல்






அம்மனுக்கு ஸ்வர்ணாபிஷேகம்  நடைபெற்ற காட்சி 

 

 முத்தங்கி சேவையில்  ஹொசகோட்டை ஸ்தல  சௌடேஸ்வரி அம்மன்



 சேலம் குகை தொடப்ப 2013 விழா கமிட்டியார்களுக்கு மரியாதை செய்யப்பட்ட காட்சி . விழாவுக்கு சேலம் மாநகர மேயர்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.





சௌடேஸ்வரி அம்மன் தஞ்சை ஓவியமாக அம்மன் திருவுருவப்படம் திறக்கப்பட்ட காட்சி .







 விழாவில் கல்விப்பரிசு வழங்கப்பட்டது .


 பரதநாட்டிய அரங்கேற்றம்



நன்றி ஹொசகோட்டை ஸ்தல  சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் நம்முடன் படங்களை பகிர்ந்தவர்கள்.