அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/10/13

ஹொசகோட்டை ஸ்தல சௌடேஸ்வரி அம்மன் அமாவாசை திருவிழா

ஹொசகோட்டை ஸ்தல  சௌடேஸ்வரி அம்மன் அமாவாசை திருவிழா புகைப்படங்கள் :


ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி  அம்மனுக்கு திருமஞ்சனம் கொண்டுவரும் காட்சி





ஸ்ரீ சக்தி அழைப்பு  



சக்தி அழைக்க சேலம் குகை தோட்டப்ப  2013 செட்டிகாரர்
 Dr திரு.வெங்கடேசன்   அவர்கள் அம்மனை எடுத்து வருதல்






அம்மனுக்கு ஸ்வர்ணாபிஷேகம்  நடைபெற்ற காட்சி 

 

 முத்தங்கி சேவையில்  ஹொசகோட்டை ஸ்தல  சௌடேஸ்வரி அம்மன்



 சேலம் குகை தொடப்ப 2013 விழா கமிட்டியார்களுக்கு மரியாதை செய்யப்பட்ட காட்சி . விழாவுக்கு சேலம் மாநகர மேயர்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.





சௌடேஸ்வரி அம்மன் தஞ்சை ஓவியமாக அம்மன் திருவுருவப்படம் திறக்கப்பட்ட காட்சி .







 விழாவில் கல்விப்பரிசு வழங்கப்பட்டது .


 பரதநாட்டிய அரங்கேற்றம்



நன்றி ஹொசகோட்டை ஸ்தல  சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் நம்முடன் படங்களை பகிர்ந்தவர்கள்.

20-08-13 அன்று மிகவும் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற உள்ள ஜனிமார அப்ப (பூணூல் பண்டிகை )


ஜனிமார அப்ப

அன்று மிகவும் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற உள்ள ஜனிமார அப்ப (பூணூல் பண்டிகை ) ,சேலம் கருங்கல்பட்டி .

-நன்றி கருங்கல்பட்டி வீரகுமாரர்கள்

105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம்

தேவல மகரிஷி தேவாங்கரின் ஏழு அவதாரங்களில் முதல் அவதாரமாவார். இதன் பின் வித்யாதரர் முதலான ஆறு அவதாரங்கள் எடுக்கப்பட்டன. இவ்வவதார காலங்களுக்குப்பின் காளசேன மன்னன் காலத்தில் வம்ச விருத்தி அற்றுப் போனது. கௌதமர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்ய, யாகத்தின் பயனாய் காளசேனனுக்கு 10,000 குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகளுக்கு 700 மகரிஷிகளைக் கொண்டு உபநயனம் முதலான வைதீக காரியங்களையும் தீட்சைகளும் செய்விக்கப்பட்டன. எந்தெந்த மகரிஷிகள் எந்தெந்தக் குழந்தைகளுக்குத் தீட்சை செய்வித்தார்களோ அக்குழந்தைகளும் அவரின் வழிவந்தோர்களும் அந்தந்த மகரிஷிகளின் கோத்ரங்களைச் சார்ந்தவர். 

ஒருவேளை மகரிஷிகள் தீட்சை தருங்கால் தம் குலத்தோரை ஆசீர்வத்திக்க ஆதி தேவாங்கரான தேவல மகரிஷி வருகை தந்து இருக்கலாம். அவரும் ஒரு மகரிஷியாதலின் சில குழந்தைகளுக்குத் தீட்சை செய்து இருக்கலாம். இக்கோத்ர மகரிஷி தேவலரின் பெயரைத் தாங்கிப் பிற்காலத்து விளங்கிய ஒரு மகரிஷியாக இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சல்லாதவரு :- நீர்மோர் தானம் வழங்குபவர்கள். 

கோமுகதவரு :- பசுவின் முகம் போல் உள்ள கமண்டலத்தால் அபிஷேகம் செய்து செய்து சிவ வழிபாடு செய்பவர்கள். 

ஜிடாதவரு :- சேராங்கொட்டை மரத்தின் கீழ் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்கள். சேராங்கொட்டை கொண்டு பலவகை வைத்தியம் செய்பவர்கள். 

ரெப்பகதவரு, ரெப்பிதவரு.