அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/19/14

ஸ்ரீ இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் மங்கள பாடல்கள்

 ஸ்ரீ இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் மங்கள பாடல்கள்

 

 

 

 

 

 

 

 

மங்களப் பாடல் - 1

 பாலிலே அபிஷேகம்
 பழத்திலே அபிஷேகம்
 தேனிலே அபிஷேகம்  தேவர்களுக்கு
 எள்ளிலே அபிஷேகம்
 எண்ணாயிரம்  காணிக்கை சௌடேஸ்வரிக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம் 

மங்களப் பாடல் - 2

 அசுரன நரவெத்தி
 அலெயனு கூண்ட்டனு மாடி
 நிரவு மந்தாரா கிரியெல்லி
 நீண்ட்டு மக்கான ஊடி
 உலவு தேவாங்கனியே
 ஓப்பு சாமுண்டேஸ்வரி
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 3

 அந்தி மல்லிகை மலர்
 அருளி செந்தா மலர்
 கொத்து மாமரிக் கொளுந்து
 குமு குமுகுமுங்கவே
 அந்த மலர் வாசங்கள்
 எங்கெங்கு மணக்குமோ
 தந்தையுடன் நடராஜன் தமயந்திக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 4

 அச்சுநா நத்தனுக்கு
 அமுத பார்வதி கௌரி
 கச்சத்துடன் நகையணிந்து
 கல்யாணக் கோலம் கொண்டு
 ரங்கனி துடாங்கனி ரதிசுவனக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 5

 அஞ்சு சீர் அருள் பெட்டி
 அரிய செம்பலு பெட்டி
 ஆளாத்தி கேசெம்பு சேத்தப் பெட்டி
 இந்திரண்டு செல்வேடு
 அந்திரெண்டு பொய்வேடு
 பந்த கஸ்தூரி பல பொட்டு பெட்டி
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 6

 சரஸ்வதிக்கும் பார்வதிக்கும்
 சம பூமி லட்சுமிக்கும் அனுதினமும்
 துதி செய்ய அருள் ஜோதிக்கு
 மகாலட்சுமி வாரார்னு
 மங்களம் பாடவே சௌடேஸ்வரிக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 7

 சின்ன சின்ன சொம்புலு
 சிவகஞ்சி தீர்த்தமுலு
 அப்புரஞ்சி ஜமுக்காள அம்மனுக்கு
 செல்லின கந்தமுலு
 செமந்திய புஸ்மமுலு
 தல்லி சாமுண்டியே
 நீ கார்த்தியுலு
 சதிபதி கூடவே யித்து
 நீ நோடு பேக்கம்மா
 சௌடேஸ்வரிக்கு
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 8

 தேவாங்க குல தெய்வதாயியெ
 தேவல முனின காப்பாடிதவளியெ
 தேவாங்க குலன காப்பாடு பவளியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 9

 கைலாச வாசவியெ
 கையல்லி திரி சூல தவளியெ
 கேளிதவர கொடுவ அம்மனியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 10

 மங்கள மங்கள ஸ்ரீ சௌடேஸ்வரியெ
 சாந்த ரூபி சூடாம்பிகெயெ
 ஆதிவீர சாமுண்டீஸ்வரியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 11

 பேரூரு விளங்கவே
 பெரிய தேரோடவே
 தெப்பத்தேரோடவே
 திருநாட்டியம் ஆடவே
 ஜனங்கள் கூடவே
 திருவிழா கொண்டாடவே
 அருள்மிகுபட்டீஸ்வரருக்கு
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

பாடல் -12

 சௌடேஸ்வரியை நாம் தொழுதால்
 சுகம் எல்லாமே தேடி வரும்
 அந்த நாயகியை நினைத்திருந்தால்
 நலம் யாவும் நாடி வரும் (சௌ)
 தேவாங்கர் குலம் விளங்க
 தேவியவள் அருள் தருவாள்
 தேடி தினம் துணை கொள்வோம்
 தேவியவள் திருப்பாதம் (சௌ)
 ஆலயம் பல இருந்தும் கோவில் செல்ல 
 மனம் இல்லையோ
 படைத்தவள் நினைவில்லையோ (சௌ)
 ஆதி சிவன் மேனியில் பாதிசக்தி
 ஆனவளாம் பாடி தினம் பணிந்திடுவோம்
 பாரினில் அவள் புகழை 
 சௌடேஸ்வரியை நாம்
 தொழுவோம்.
 
 
நன்றி devangakula.org