அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/19/13

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) பொதுப்பலன்கள்

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொதுப்பலன்கள்


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில்- தனுசு ராசியில்- கன்னி லக்னத்தில் உதயமாகிறது. உங்களின் மீன ராசிக்கு 10-ஆவது ராசியிலும், 7-ஆவது லக்னத்திலும் வருடம் பிறப்பது மிகமிக யோகமான- அனுகூலமான அமைப்புதான்! மேலும் ஆங்கிலப் புதுவருடம் தனுசு ராசியில் பிறப்பதால்- தனுசு ராசிநாதன் குருவே உங்களின் ராசிநாதன் ஆவார். அவர் மீன ராசிக்கு 4-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார்; வருட ராசியையும் பார்க்கிறார். அத்துடன் கன்னி லக்னத்துக்கு (வருட லக்னத்துக்கு) 10-ல் நிற்கிறார். ஆகவே மீன ராசிக்கு 10-ஆம் இடம், வருட லக்னத்துக்கு 10-ஆம் இடம் என்று 10-க்கு குரு தொடர்பு இருப்பதால், இந்த ஆண்டு உங்களுடைய தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் மேன்மையும் முன்னேற்றமும் யோகமும் உண்டாகும் என்பது உண்மை!

2013 நவம்பரிலிருந்தே குரு வக்ரமாக இருக்கிறார். 12-3-2014 வரை குரு வக்ரம்! வக்ரத்தில் உக்ர பலம் என்பது அடிக்கடி எழுதிவருகிறேன். நல்ல இடத்தில் குரு வக்ரமாக இருப்பதால், உங்களுக்கு நல்ல பலன்களே பலமாக நடக்கும். அதாவது மீன ராசிக்கு 4-ஆம் இடம், 10-ஆம் இடம், 12- ஆம் இடம் ஆகியவற்றுக்கு குரு தொடர்பு. தேக ஆரோக்கியம், பூமி, வீடு, வாகன யோகம், தொழில் யோகம், வெளிநாட்டுப் பயணம், குடும்பத்தில் சுபமங்கள விரயம் ஆகிய பலன்கள் நடக்கும். 8-ஆம் இடத்தையும் (துலாத்தையும்) குரு பார்க்கிறார். அதனால் உங்களைப் பற்றி வெளியுலகத்தில் தேவையற்ற விமர்சனம் செய்வார்கள். உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்கள் மீது அவதூறு பரப்புவார்கள். அது உங்கள் காதில் விழும்போது கவலைப்படுவீர்கள். அதாவது நீங்கள் யாரையும் பகையாகவும் விரோதியாகவும் கருதவில்லையென்றாலும், உங்களுக்கு வேண்டாதவர்கள் அல்லது உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களை எதிரியாகக் கருதி இடைஞ்சல் செய்வார்கள். ஆனால் அவையெல்லாம் நிலைக்காது- நீடிக்காது! ஏனென்றால் உங்களிடம் உண்மை இருப்பதால் "சத்தியமேவ ஜெயதே'- வாய்மையே வெல்லும்! உங்கள் கவலைக்கும் சஞ்சலத்துக்கும் அட்டமச் சனியும் ஒரு காரணமாக அமைகிறது.

2014- ஜனவரி முதல் குருபார்வையின் சிறப்பால் அட்டமச் சனியின் கெட்டபலன் எல்லாம் விட்டு விலகிப்போகும். 2014 மார்ச் முதல் ஜூன் வரை சனியும் வக்ரம் அடைவார். சனியின் வக்ரம் அட்டமஸ்தான பலனை அதிகப்படுத்தலாம். அதாவது சந்தேகம், சலிப்பு- எந்தப் பிரச்சினையிலும் பயம், பீதி, கவலை தோன்றலாம். ஜூன் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. குரு கடகத்தில் உச்சம்பெறும் காலம். உச்சசனி உச்ச குருவைப் பார்ப்பதால், உச்சனை உச்சன் பார்க்கும் காலம் மேற்கண்ட கெடுபலன் நீங்கிவிடுகிறது.

கன்னி லக்னத்துக்கு (வருட லக்னத்துக்கு) 4, 7-க்குடைய குரு 10-ல் மிதுனத்தில் நின்று 2-ஆம் இடம் துலாம், 4-ஆம் இடம் தனுசு, 6-ஆம் இடம் கும்பம் ஆகியவற்றைப் பார்ப்பதால், பொருளாதாரத்தில் தட்டுப்பாடோ நெருக்கடியோ இருக்காது. தேக ஆரோக்கியத்திலும் தெளிவான நிலையுண்டாகும். முன்சொன்னமாதிரி பூமி, வீடு, வாகனம், தாயன்பு, கல்வி மேன்மை ஆகிய 4-ஆம் இடத்துப் பலனும் விருத்தியடையும். 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பற்றாக்குறை பட்ஜெட்டை சரிக்கட்ட அல்லது அத்தியாவசிய தேவைக்காக கடன்வாங்க நேரும். ஒருசிலர் வீடுகட்ட அல்லது கார் வாங்க அல்லது கல்யாணம் காட்சி நடத்த கடன் வாங்கலாம். அது சுபக் கடன்தான்.

கடந்த 2013-ல் 5-ஆம் இடம் புத்திரஸ்தானத்தை சனி பார்த்ததால், பிள்ளைகளின் வைத்தியச் செலவு அல்லது பிரசவ செலவுக்காக நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியிருக்கலாம். 2014 ஜூன் மாதம் 5-ல் குரு உச்சம்பெறும்போது அந்தக் கடன்களையெல்லாம் அடைத்துவிடலாம். அடகு நகைகளையும் மீட்டு விடலாம். ஒருசிலர் இதய தொந்தரவு, விபத்து, எலும்பு முறிவு போன்ற வகையில் லட்சக்கணக்கில் (2013-ல்) வைத்தியச் செலவும் செய்தார்கள். 2014-ல் அவர்களும் முழு அளவில் குணமடைந்து செயல்படுவார்கள்.

மொத்தத்தில் 2014-ல் வாழ்க்கை முன்னேற்றம், தொழில் உயர்வு, வியாபார விருத்தி, பணியில் மனநிறைவு, புதுவாழ்வு, செல்வாக்கு, கீர்த்தி, கௌரவம், பாராட்டு, பெருமை ஆகிய பலனையெல்லாம் சந்திக்கலாம். படித்துமுடித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும்- (கணவர் அல்லது மனைவிகளுக்கும்) வேலைவாய்ப்பு அல்லது தொழில் வருமானம் கூடும். வருடத் தொடக்கம் முதல் ஆறு மாத காலம் செவ்வாய் கன்னியில் இருப்பதால் கணவர் அல்லது மனைவி வகையில் யோகம்- பாக்கியம் உண்டாகும்.

குருப்பெயர்ச்சி: 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. மீன ராசிக்கு 4-ல் இருக்கும் குரு 5-ஆம் இடம் புத்திரஸ்தானத்துக்கு மாறுவார். அக்காலம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியம், திருமணம், பட்டப்படிப்பு, வேலை, சம்பாத்தியம், வாரிசு யோகம், வீடு, மனை, வாகன யோகம் போன்ற நன்மைகள் உண்டாகும். வருட ராசி தனுசுக்கு 8-ஆம் இடத்தில் குரு மறைவானாலும் வருட லக்னம் கன்னிக்கு 11-லாபஸ்தானத்தில் உச்சம் பெறுவதால், எதிர்பாராத அதிர்ஷ்டமும் லாபமும் எதிர்பார்க்கலாம். அதே சமயம் கடக குரு மீன ராசிக்கு 11-ஆம் இடம், வருட ராசி தனுசு ராசிக்கு 2-ஆம் இடங்களுக்கு உச்ச குரு பார்வை என்பதால் திடீர் தனப்ராப்தி, லாபத்துக்கு இடமுண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி, ஊர்மாற்றம் ஏற்படலாம்.

குரு வக்ரம்:  2014 மார்ச் வரை குரு வக்ரம். மிதுன குரு வக்ரம். அற்புத காலம். முன்சொன்னபடி 4-ஆம் இடத்து யோகம் அற்புதமாக நடக்கும். 2-ஆவது கட்டமாக 2014 நவம்பர் 27 முதல் குரு வக்ரம். 2015 மார்ச் வரை அப்போது குரு 5-ல் உச்சம். 5-ஆம் இடத்துப் பலன்களை ஆணித்தரமாக செயல்படுத்துவார்.

குரு அஸ்தமனம்: 2014 ஜூலை 6 முதல்  ஒரு மாதம் ஆகஸ்டுவரை குரு அஸ்தமனம். 5-ல் கடகத்தில் உச்சகதியில் குரு அஸ்தமனம் அடைவதால் பாதிப்பு ஏற்படாது என்றாலும், உங்களுடைய முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை, தாமதம், சுணக்கம் ஏற்படலாம். சிலசமயம் ஒரு செலவுக்கு இரு செலவு ஆகலாம். வீண் விரயம்! சில சமயம் வைத்தியச் செலவு! சிலசமயம் தாயார் வகையில் அல்லது பிள்ளைகள் வகையில் செலவு.

கிழக்குத் தாம்பரத்தில் குருக்ஷேத்திரத்தில் ஸ்ரீஅகண்ட பரிபூரண சச்சிதானந்த சத்குரு சுவாமி பீடம் இருக்கிறது. அங்குசென்று தியானம் செய்யவும். கிருஷ்ணானந்தர் சுவாமி அலைபேசி: 98846 52969; மணி சித்தர், அலைபேசி: 99400 09371-ல் தொடர்பு கொள்ளலாம்.

ராகு- கேது பெயர்ச்சி: 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. மீன ராசிக்கு 8-ல் இருந்து அட்டமச்சனியோடு சேர்ந்து உங்களை வாடவைத்த- வதங்க வைத்த ராகு- ராசிக்கு 7-ஆம் இடத்துக்கு கன்னிக்கு மாறுகிறார். குடும்பஸ்தானத்தில் நின்று குடும்ப அமைதியையும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் கெடுத்துவந்த கேது- ஜென்ம ராசிக்கு மீனத்துக்கு மாறுகிறார். இரண்டு பாப கிரகங்களும் கேந்திர பலம் பெறுவதால், உங்களுக்கு குடும்ப அமைதி, ஆனந்தம், திருப்தி, தேக சுகம் எல்லாம் உண்டாகும். திருமணத்தடையும் தோஷமும் விலகும்.

சனிப்பெயர்ச்சி: 2014 டிசம்பர் 16-ல் சனிப்பெயர்ச்சி. ராசிக்கு 8-ல் இருந்து உங்களை தலையில் கொட்டிக்கொண்டயிருந்த சனி- எட்டாமிடத்தை விட்டு விலகி 9-ஆம் இடம் மாறுகிறார். இதுவே உங்களுக்கு 100-க்கு 100 ஆறுதல். பட்ட கஷ்டத்துக்கு ஒரு விமோசனம்! எனவே இனிமேல் தொட்டது துலங்கும்; விட்டது கிடைக்கும்; இழந்தது மீண்டும் வரும்.

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி


இந்த மாதம் எல்லாக் காரியங்களையும் மிகவும் எளிதாக- (ஈஸியாக) நிறைவேற்றிவிடலாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட தடைகளையும் சிரமங்களையும் ஒரு அனுபவப்பாடமாக எடுத்துக்கொண்டு, மாற்றுத் திட்டத்தோடு செயல்பட்டு சாதிக்கலாம். முயற்சிகள் வளர்ச்சியைக் கொடுக்கும். தளர்ச்சியை விலக்கும். மாற்றங்கள் ஏற்றங்களாக விளங்கும்
.

பிப்ரவரி


பொருளாதார வகையில் போதிய நிறைவும் தாராளமும் இருக்கும். சேமிப்புத் திட்டத்தில் முதலீடு பெருகும். நீண்டகால தவணைத்திட்டத்தில் சில அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றலாம். புகழையும் தற்பெருமையையும் விரும்பாத உங்களுக்கு பாராட்டும் பரிசும் புகழும் போற்றுதலும் தேடிவரும். சாதனையாளர் விருதும் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் எதிர்பார்க்கலாம்.

மார்ச் 


2, 9-க்குடைய செவ்வாய் 7-ல் வக்ரம். (2 மாதம்). 7-ல் இருப்பதால் திருமணம், உபதொழில் யோகம், மனைவியின் அன்பு, மனைவி உறவினர்கள் வகையில் சுபச்செலவு ஆகிய பலன் உண்டாகும். வியாபாரிகளுக்கு அரசு அதிகாரிகளின் தொல்லைகள் ஏற்பட்டாலும், மாமூல் கொடுத்து சரிக்கட்டலாம். புதிய லைசென்ஸ் அல்லது ஒப்பந்தங்கள் செயல்படும். தெய்வ வழிபாடு, பிரார்த்தனை நிறைவேறும்.

ஏப்ரல்


ஒன்றை இழந்தால் இன்னொன்றைப் பெறலாம். ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும். எந்த ஒன்றைப் பெறுவதானாலும் அதற்கென்று ஒரு விலை உண்டு. அதைக் கொடுத்துதான் வாங்கவேண்டும். இதுபோன்ற பழமொழி எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். இம்மாதம் தமிழ்ப்புத்தாண்டு ஜயவருடம் பிறக்கிறது. அதுவும் அஸ்த நட்சத்திரம் கன்னி ராசியில் மேஷ லக்னத்தில் பிறப்பதால், உங்களுக்கு ஆங்கில வருடத்தோடு தமிழ்ப்புத்தாண்டும் ராஜயோகமாக அமையும். குடும்பத்தாரை சந்தோஷப்படுத்துவீர்கள்.

மே


புத்தாண்டைத் தொடர்ந்து சத்தான பல நற்காரியங்களை சாதிப்பீர்கள். வருங்காலத் திட்டத்தை வழிமுறையோடு திட்டமிட்டுச் செயல்படுத்தி சீரும் சிறப்பும் அடைவீர்கள். "ஒரு மலையை அண்டி வாழவேண்டும் அல்லது ஒரு மனிதனை நம்பி வாழவேண்டும்' என்று சொல்லுவார்கள். அதற்கேற்றதுபோல் சிலருக்கு மலைப்பகுதியில் வேலையும் வாழ்க்கையும் அமையும். அல்லது முக்கியமான வி.ஐ.பி.யின் தொடர்பு கிடைக்கும். வி.ஐ.பி. எல்லாம் வி.ஐ.பி ஆகமாட்டார்கள். உங்கள் மேல் நல்லபிப்பிராயமும் உண்மை அன்பும் கொண்டவர்கள்தான் வி.ஐ.பிக்கள். உங்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் உங்களுக்கு வி.ஐ.பிக்கள். அப்டிப்பட்டவர்கள் உதவியால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.

ஜூன்


இந்த மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. இரண்டும் உங்களுக்கு சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் தரும். குரு உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பது யோகம். மதிப்பு, மரியாதை, கௌரவம், கீர்த்தி, செல்வாக்கு எல்லாம் கூடும். திருமணத்தடை விலகும். காசுபணம் சேமிப்பு உண்டாகும்.

ஜூலை


அடுத்தவர்களுக்காகவும், பழகிய நண்பர்களுக்காகவும் அவர்கள் பிரச்சினைகளை தலையில் ஏற்றுக்கொண்டு அவர்களை திருப்திபடுத்த கைக்காசுகளை செலவு செய்வீர்கள். ஆனால் கடைசியில் அவர்கள் நன்றி மறந்தவர்களாக மாறிவிட்டதை நினைத்து வேதனைப்படுவீர்கள். நல்லதுக்கே காலமில்லை. சொல்லப்போனால் வெட்கக்கேடு. குரு அஸ்தமன பலன் இதுதான்.

ஆகஸ்டு


ஒரு புதிய காரியத்துக்கு திட்டம் போடுவீர்கள். அது நிறைவேறி செல்வாக்கான ஒரு பிரமுகரை நாடுவீர்கள். அவரும் மனப்பூர்வமாக உதவுவார். கூட்டுசேர்ந்து தொழில் தொடங்கி லாபம் சேர்க்கலாம். வடகிழக்குப் பகுதி பயணமும் ஏற்படும். அதனால் பயன் உண்டாகும்.

செப்டம்பர்


பெரியோர்கள், ஞானிகள், மகான்களின் ஜீவசமாதி தரிசனமும் ஆசியும் கிடைக்கும். முயற்சிகள் எல்லாமே வளர்ச்சியடையும். மனைவி, மக்களிடம் அபிமானம் காட்டி மகிழலாம். அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வேண்டியதைச் செய்யலாம்.

அக்டோபர்


எதிர்பார்த்த துறையில் பணவரவு கிடைக்கும். பெரியோர்களுக்கு பேரன், பேத்தி, சந்தோஷம் உண்டாகும். பூர்வ புண்ணியத்தால் சௌபாக்கியம்- க்ஷேமம் ஏற்படும். பங்காளி- மைத்துனர் வகையில் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சுபச்செலவு. மாதக்கடைசியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

நவம்பர்


மாதம் முழுக்க அயராத உழைப்பு. சாப்பிடவும் தூங்கவும் நேரம் கிடைக்காது. கண் துஞ்சார்- பசி நோக்கார்- கருமமே கண்ணாயினார் என்ற மாதிரி உழைப்புக்கும் பட்ட பாட்டிற்கும் பலன் அடுத்த மாதம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு எதிர்பார்க்கலாம்.

டிசம்பர்


16-ஆம் தேதி அட்டமச்சனி விலகிவிடும். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் நீங்கிவிடும். இனி எந்நாளும் இன்பமே- துன்பமில்லை. நீங்களும் நல்லாயிருப்பீர்கள். உங்களைச் சார்ந்தவர்களும் நன்றாகயிருப்பார்கள். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வகையகம்' என்ற கொள்கைதான்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு


பூரட்டாதியிலிருந்து 2014 வருடப்பிறப்பு நட்சத்திரம் மூலம்- 4-ஆவது தாரை என்பதால், நோய் நிவர்த்தியும் தேக சௌக்கியமும்- மனதில் உற்சாகமும் ஆர்வமும் உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்ய உறவும் அன்பும் பாசமும் பொழியும். சிலருக்கு ஊர் மாற்றம், சிலருக்கு குடியிருப்பு மாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம், சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு யோகம் உண்டாகும்.

பரிகாரம்: ஆடுதுறைக்கு 2 .கி.மீ. தூரத்தில் கஞ்சனூரில் மேற்கு எல்லையில் உள்ள மணியாக் குளத்தில் வடகரையில், வடமேற்கு பாகத்தில் ஹரதத்தர் அதிஷ்டானக் கோவில் உள்ளது. சிவலிங்கப் பிரதிஷ்டை. (மற்ற விவரத்தை கும்ப ராசிப் பலனில் பூரட்டாதி நட்சத்திரப் பரிகாரத்தில் பார்க்கவும்).

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு


உங்கள் நட்சத்திரத்தில் இருந்து, மூல நட்சத்திரம் 3-ஆவது தாரை, விபத் தாரை என்றாலும் உத்திரட்டாதி நட்சத்திரம் சனியின் நட்சத்திரம். சனி உச்சமாக இருப்பதால் பாதிக்காது.

பரிகாரம்: திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் சென்று திரிநேத்ர தசபுஜ ஆஞ்சனேயரை சனிக்கிழமை வழிபடவும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு


உங்கள் நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் 2-ஆவது நட்சத்திரம் சம்பத் தாரை. எனவே 2014-ல் செல்வச் சேர்க்கை, குடும்பத்தில் மங்கள சுபகாரியம், பூமி, மனை, வீடு, வாகன பாக்கியம், கல்வி மேன்மை, பதவி உயர்வு, தேக சுகம் ஆகிய நன்மைகள் நடக்கும்.

பரிகாரம்: மயிலாடுதுறை- தரங்கம்பாடி பாதையில் 6 கி.மீ. தூரத்தில் விளநகர் எனும் கிராமத்தில் 16 அடி உயரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக வரதராஜப்பெருமாள் அருள்பாலிக்கிறார். அவர் சந்நிதியில் அஷ்டாஷ்டர மந்திரத்தை (ஓம் நமோ நாராயணாய நமஹ) 108 முறை ஜெபித்தால் கேட்ட வரம் அருளுவார்.

No comments:

Post a Comment