அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/19/13

2014 ஆண்டு பொதுப்பலன்

2014 ஆண்டு பொதுப்பலன்

எப்போதும் ஆங்கிலப் புதுவருடம் ஜனவரி 1-ஆம் தேதி கன்னியா லக்னத்தில் உதயமாகும். நட்சத்திரம், கிழமை, கிரக நிலைகள் மட்டும் மாறுபடும். 2014-ஆம் ஆண்டின் கூட்டு எண்- 7. இது கேதுவின் எண்- மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், அதுவும் கேதுவின் நட்சத்திரம்- வருடம் பிறப்பது கேது தசை இருப்பில்! எல்லாம் கேதுமயம் என்பதால், இந்த 2014 விநாயகரின் அருள்கடாட்சத்தோடு பிறக்கிறது. அசுவினி, மகம், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும்; ஜாதகரீதியாக நடப்பு கேது தசை, கேது புக்தி நடைப்பவர் களுக்கும் 2014 புதுவருடம் இதமான வருடமாக- இனிய வருடமாகத் திகழும்.

1-1-2014 என தேதி, மாதம், வருடம் எல்லாவற்றையும் கூட்டினால் 9 வரும். இது செவ்வாயின் எண். புதுவருடம் கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னத்தில் செவ்வாய் இருக்கிறார். செவ்வாயின் ராசியான மேஷத்தில்   தசாநாதன் கேது வருட எண் நாயகன் இருக்கிறார். அந்தக் கேதுவையும் செவ்வாய் 8-ஆம் பார்வை பார்க்கிறார்.

2014 தனுசு ராசியில் பிறக்கிறது. அதன் அதிபதி குரு ராசிக்கு 7-ல் லக்னத்துக்கு 10-ல் இருக்கிறார். ராசியையும் பார்க்கிறார்; லக்னாதிபதி புதனையும் பார்க்கிறார்.

ஆகவே மிதுன ராசி- மிதுன லக்னம், கன்னி ராசி- கன்னி லக்னம், தனுசு ராசி- தனுசு லக்னம் ஆகியவற்றில் பிறந்தோருக்கெல்லாம் 2014 மிகச் சிறந்த வருடமாகவும் யோகமான வருடமாகவும் அமையும். அவரவர் ஜாதகத்தில் என்ன தசா புக்திகள் நடந்தாலும் சரி - எந்த ராசி, லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி- மேலே குறிப்பிட்ட நட்சத்திரத்திலும்; ராசி- லக்னத்திலும் பிறந்தவர்களுக்கு 2014 அற்புதமான வருடமாகவும் அதிர்ஷ்டம் நிறைந்த வருடமாகவும் அமையும் என்பதில் ஐயப்பாடு இல்லை.

இந்த வருடம் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட இடமுண்டு. ஆட்சி அமைக்கும் புதிய கட்சியுடன் தமிழக ஆளும் கட்சியும் கூட்டணி சேரலாம். தமிழகத்தைப் பொறுத்தஅளவில் தற்போது ஆட்சிமாற்றம் வர வாய்ப்பு இல்லை. ஆனால் ஆளும் கட்சி அடிக்கடி அமைச்சர்களை மாற்றியமைக்கலாம். ஆளும் கட்சி மக்களுக்கு இலவச சலுகைகளை அள்ளி வழங்கினாலும், வியாபாரிகளிடமும் நடுநிலை மக்களிடமும் அதிருப்தியைத் தான் சம்பாதிக்கும். கிராமத்து மக்களிடம் செல்வாக்கை எதிர்பார்த்தாலும், கடந்த காலத்தைப்போல முழு மெஜாரிட்டி கிடைக்காது.

இந்த வருடம் இயற்கையின் கருணையினால் மழை வளம்- நீர் வளம் திருப்திகரமாக இருக்கும். அதனால் விவசாயமும் சாகுபடியும் திருப்திகரமாக இருக்கும். என்றாலும் அரிசி மற்றும் தானியங்கள் விலை உயர்வு இருக்கத்தான் செய்யும். மின்சார உற்பத்தியும் நன்றாக இருக்கும். அதனால் மின்வெட்டு குறையும்.

குரு கடகத்தில் உச்சம் பெறுவதால் ஆன்மிகம் மேலோங்கும். கோவில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் பெருகும். மாதாந்திர பூஜை வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் உண்டாகும். அதேசமயம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களும், குண்டுவெடிப்பு மிரட்டல்களும், அதனால் கெடுபிடியான சோதனைகளும் தீவிரமாக இருக்கும். அதனால் மக்கள் கூட்டம் குறையும். கோவில்களில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் வியாபாரம் குறைவதையுணர்ந்து புலம்புவார்கள். 

"கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?' என்ற மாதிரி, தீவிரவாதிகளின் சதிவேலைகள் ஒருபுறம் தீவிரமாகத்தான் இருக்கும். அதைத் தடுப்பதாக அரசு சபதம் போட்டாலும், அவர்களுக்கு சவாலாக அமையும். இவர்களுக்கிடையில் அப்பாவி மக்கள் பலியாவது சர்வசாதாரணமாக இருக்கும். என்னதான் அரசு இறந்தவர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டஈடு கொடுத்தாலும் உயிருக்கு விலைமதிப்பு உண்டா? மனித உயிர்கள்- ஆடு, கோழி, மீன் போன்ற உயிர்களுக்குச் சமமாக பலியாகும் அவலநிலை எப்போது மாறுமோ? கடவுளுக்கே வெளிச்சம்!

2014- ஜூலை முதல் ஒன்றரை மாதம் சனியும் செவ்வாயும் ராகுவும் துலா ராசியில் ஒன்று கூடியிருப்பார்கள். அதற்கு முன்னதாக ஜூன் மாதம் குரு கடகத்துக்கு உச்சமாக மாறிவிடுவார். உச்ச வியாழனை உச்ச சனி 10-ஆம் பார்வை பார்ப்பார். உச்சனை உச்சன் பார்ப்பது தீது. நாட்டில் வாகன விபத்து, விமான விபத்து, அக்னிபயம் (தீ விபத்து), உயிர்ச்சேதம் அதிகமாக இருக்கும். இயற்கையின் சீற்றத்தால் விபரீத விளைவுகளும், அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கு ஆபத்துகளும், பச்சிளம் குழந்தைகள் பலியாவதும், சிவகாசி போன்ற பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகளும் உயிர்சேதங்களும், வெள்ளச் சேதம்- வேளாண்மை சேதம் போன்ற நெஞ்சை நெருடும் நிகழ்ச்சிகளும் நடக்கும். அரசியல் துறையிலும் அருவருப்பான மாற்றங்கள் உண்டாகும். பெருந்தலைவர்களுக்கு கண்டம், ஆபத்து, தீவிர சிகிச்சை போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கும்.

இவையெல்லாம் மாறவேண்டுமென்றால் ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து எல்லாரும் கூட்டுவழிபாடும் பிரார்த்தனையும் செய்யவேண்டும். அவரவர் ஆசார முறைப்படி இந்து கோவில்களிலும், சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் வழிபாடு நடத்தவேண்டும். ஹோமங்கள் நடத்தப்பட வேண்டும். தெய்வ நம்பிக்கையும் கூட்டுவழிபாடுகளும் சர்வசமயக் கூட்டுப் பிரார்த்தனைகளும்தான் நாட்டையும் காப்பாற்றும்; வீட்டையும் காப்பாற்றும்.

பங்குச் சந்தை வருட முற்பகுதியில் ஏற்றமாகவும், குருப்பெயர்ச்சிக்கு பிறகு வீழ்ச்சியாகவும் அமையும் தங்கம், வெள்ளி, கல் நகைகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும். என்றாலும் புதுப்புது ஜுவல்லரி கடைகள் திறக்கப்பட்டு, போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவிப்பார்கள். கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும்; தொலைபேசி, அலைபேசி, தொலைக்காட்சி விலையும் குறையும். 

சினிமாத் துறையில் புதுப்புது கலைஞர்களும் புதுப்புது டெக்னீஷியன்களும் புதுவரவாக இருக்கும். இத்தனை திறமை படைத்தவர்கள் "இதுவரை எங்கே மறைந்திருந்தார்கள்' என்று ஆச்சரியப்படுமளவு கலைத்துறையில் பிரகாசிக்க முடியும். சின்னத்திரையிலும் புதுப்புதுப் பாடகர்களும் இசையமைப்பாளர்களும் அசத்துவார்கள்.

காய்கறி, மளிகைப்பொருள் விற்பனையில் பெரிய பெரிய கோடீஸ் வரர்களும் கம்பெனிகளும் தலையிட்டு சிறுவியாபாரிகளின் தொழிலுக்கு போட்டியாக மாறுவார்கள். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், கச்சா எண்ணெய், எரிவாயு- கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையேற்றமும் தாங்கமுடியாத சுமையாகத் தோன்றும். மக்களும் எவ்வளவு விலையேற்ற மானாலும், "வாங்கித்தான் ஆகவேண்டும்; வாழ்ந்துதான் ஆகவேண்டும்' என்று சகித்துக்கொண்டு போவார்கள். விலைவாசி உயர்வைப்பற்றி அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்வதோடு, போராட்டம் நடத்துவதோடு விட்டுவிடுவார்கள். எந்தப்பயனும் இருக்காது.

நூல் மார்க்கெட் ஜவுளித்துறையில் சில முன்னேற்றமான திருப்பங்கள் தெரியும். அதை நம்பி வாழும் மக்களுக்கும் மறுமலர்ச்சியும் நம்பிக்கையும் உதயமாகும். கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு மேலும் பல சலுகைகளை அறிவிக்கும்.

கூட்டுறவு சொசைட்டி வீட்டுக் கடன்களில் அரசு சில தள்ளுபடி சலுகை களை அறிவிக்கலாம். ரேஷன் கடைகளில் சோதனைகள் நடத்தி, ரேஷன் உணவுப் பொருள்களை கடத்தல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையிலும் நீதித்துறையிலும் அதிரடி மாற்றங்களும் புதியவர்களின் நியமனமும் இருக்கும்.

ஆன்மிகத்திலும் இந்து அறநிலையத் துறையிலும், பழைய கோவில்களின் திருப்பணித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கும். கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரை, ஹஜ் யாத்திரை போகும் ஆன்மிக வாதிகளுக்கும் பக்தர்களுக்கும் அரசு பல சலுகைகள் அறிவித்து  உதவிசெய்யும்.

No comments:

Post a Comment