அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/21/13

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்

2014-ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கு 5-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 2-ஆவது லக்னமான கன்னி லக்னத்திலும் மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அதனால் இந்த வருடம் உங்களுக்கு இனிய வருடமாகத் திகழும். வருடம் பிறப்பது மூல நட்சத்திரத்தில்- அதற்கு ஜென்மம், அனுஜென்மம், திரிஜென்ம நட்சத்திரம் என்பது மூலம், அஸ்வினி, மகம் ஆகும். ஆகவே வருட நட்சத்திரத் தில் இருந்து திரிஜென்ம நட்சத்திரமான மகம் உங்கள் ராசியில் அடங்குவதால், வருடப் பிறப்பு உங்களுக்கு யோகமாகவே அமையும். உங்களுடைய ஆற்றல் பிரகாசிக்கும். தோற்றம் மிளிரும். திறமை வெளிப்படும். பெருமை சேரும். செய்யும் காரியங்களிலும் முயற்சிகளிலும் சீரும் சிறப்பும் உண்டாகும். செல்வாக்கு ஏற்படும். பட்ட பாட்டுக்கு பலனும் பாராட்டும்  கிடைக்கும்.

சிம்ம ராசிக்கு 2-ஆவது தன ஸ்தான லக்னத்தில் ஆங்கிலப் புதுவருடம் பிறப்பதால், இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குப் பொருளாதாரத்தில் எந்தக் குறையும் இருக்காது. வாக்கு வன்மையும், வாக்கு நாணயமும் சிறப்பாக இருக்கும். சொல்வாக்கு, செல்வாக்கு அடையும். 

2-ஆம் இடம் வாக்கு, தனம், குடும்பம், நேத்திரம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். வாக்கு மேலோங்குவதுபோல, குடும்பத்திலும் அமைதி, ஆனந்தம், மகிழ்ச்சி, மனநிறைவு ஆகிய பலன்கள் உண்டாகும். சிம்ம ராசிக்கு 5, 8-க்குடைய குரு 11-ல் நிற்கிறார். 5-ஆம் இடத்தையே பார்க்கிறார். 2-ஆம் இடத்துக்கு 10-ல் குரு இருக்கிறார். ஜூன் மாதம் குரு மாறும்போது ராசிக்கு 12-ல் உச்சம் பெறுவார். 2-ஆம் இடத்துக்கும் வருட லக்னத்துக்கும் 11-ல் உச்சம் பெறுவார். எனவே தொடர்ந்து பொருளாதாரத்திலும் வரவுசெலவிலும் தன்னிறைவு எதிர்பார்க்கலாம். பற்றாக்குறைக்கு இடமிருக்காது. தாராளமான வரவுசெலவும் இருக்கும்.

சிம்ம ராசிக்கு ஏழரைச் சனி விலகிவிட்டது. கடந்த ஏழரைச் சனியில் கருத்து வேறுபாட்டாலும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமலும், "ஈகோ' உணர்வாலும், கணவன்- மனைவிக்குள் விவகாரம், இடைக்காலப் பிரிவு, ஒரு வீட்டுக்குள் இருந்தாலும் பேச்சுவார்த்தை இல்லாமல் மௌனப் புரட்சி என்று சங்கடப்பட்டவர்கள், இப்போது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சேர்ந்து வாழலாம். ஈகோ உணர்வு மாறி ஈகை உணர்வோடு சேர்ந்து வாழலாம்.

5-க்குடைய குரு 5-ஆம் இடத்தையே பார்ப்பதால் வாரிசு யோகம் உண்டாகும். ஏற்கெனவே பெண் வாரிசு இருப்பவர்களுக்கு இனி ஆண் வாரிசு யோகம் உண்டாகும். வாரிசு உள்ளவர்களுக்கு (பெண் அல்லது ஆண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு) அவர்களின் ஆயுள், ஆரோக்கியம், படிப்பு, வேலை, சம்பாத்தியம் போன்ற எதிர்கால முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் தென்படும். அடுத்து ஜூன் மாதம் குருப்பெயர்ச்சி. மிதுன குரு கடகத்தில் உச்சம் அடையும் காலம் 5-ஆம் இடம் தனுசுக்கு 8-ல் மறைவதால் யோகம் பாதிக்குமோ என்று சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால் புத்திரகாரகனும் புத்திரஸ்தானாதிபதியுமான குரு உச்சம்பெறுவதால் அனுகூலமான பலன்தான் நடக்கும். 5-க்கு 8-ல் சிம்ம ராசிக்கு 12-ல் குரு உச்சம் அடைவதால் பிள்ளைகள் வகையில் சுப விரயச் செலவுகள் உண்டாகும் என்பது பலன். 

பருவ வயதடைந்த பிள்ளைகளுக்கு திருமணம், புத்திர பாக்கியம் சம்பந்தப்பட்ட பலன்களும், படிக்கும் பிள்ளைகளுக்கு படிப்பு சம்பந்தமான சுபச் செலவுகளும், படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புச் செலவுகளும் ஏற்படலாம். சிலர் படிப்புக்காக அல்லது வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அதுவும்  சுபச் செலவுதான்.

3-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் சகோதர- சகோதரி வகையில் அனுகூலமும் ஆதரவும் எதிர்பார்க்கலாம். அதேபோல நண்பர்கள் வகையிலும் உதவியும் ஒத்தாசையும் எதிர்பார்க்கலாம். 3 என்பது நட்பு ஸ்தானம். அங்கு சனி இருப்பதால் நாடார் அல்லது கிறிஸ்துவ நண்பர்கள் தொடர்பும், ராகு இருப்பதால் முஸ்லிம் நண்பர்கள் தொடர்பும் உண்டாகும். அவர்களால் நன்மையும் உண்டாகும். 

சிம்ம ராசிக்கு 7-க்குடைய சனி  3-ல் உச்சம் அடைவதோடு அந்த வீட்டுக்குடைய சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனையாக இருப்பதால், மனைவி வகையில் சிலருக்கு கடன் உதவியும் அல்லது தொழில் வாய்ப்பும் உருவாகலாம்.

4, 9-க்குடைய செவ்வாய், சிம்மராசிக்கு 2-ல் இருப்பதால் தாய்- தந்தையரால் சிலருக்கு நன்மைகள், உதவிகள் உண்டாகும். தாய்வழிச் சொத்து அல்லது தந்தை வழிச் சொத்துகள் கிடைக்கவும் அமைப்பு உண்டாகும்.

9 என்பது பூர்வ புண்ணிய பாக்கியஸ்தானம். அங்கு கேது நிற்க, அதற்கு சனி -ராகு பார்வையும் செவ்வாயின் பார்வையும் கிடைப்பதால் சிலருக்கு ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம், மாந்திரீகம் போன்ற துறையில் ஆர்வம் ஏற்படலாம். இப்போதுதான் எல்லா ஜோதிடப் பத்திரிகைகளிலும் ஆன்மிகப் பத்திரிகைகளிலும் ஜோதிடம், மாந்திரிகம், தாந்ரீக பயிற்சி வகுப்புகள் பற்றிய விளம்பரங்கள் ஏராளமாக வெளிவருகிறதே. அதைப் பார்த்ததும், படித்ததும் சிலருக்கு ஆர்வம் அதிகமாகும். நாமும் அதைப் பயின்று சம்பாதிக்க வேண்டும்; பேரும் புகழும் அடையவேண்டும் என்று ஆவலாதி ஏற்படலாம். ஆனால் அதெல்லாம் சரிவருமா என்பது தெரியாது. "எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்' என்ற கதைதான். 

சிம்ம ராசிக்கு 10-க்குடைய சுக்கிரன் 10-ஆம் இடத்துக்கு பாக்கியஸ்தானத்திலும் ராசிக்கு 6-ஆம் இடத்திலும் இருப்பதால் தொழில் சம்பந்தமாக சிலர் கடன்வாங்க நேரும். கடன்வாங்கி தொழில் விருத்தி செய்யலாம் அல்லது புதிய தொழில் தொடங்கலாம். சிலர் போட்டி, பொறாமைகளையும் சந்தித்து சமாளிக்கவேண்டும். 6-ஆம் இடம் கடன், எதிரி, போட்டியைக் குறிக்கும் இடமல்லவா!

இந்த வருடத்தில் குரு பெயர்ச்சியும் ராகு- கேது பெயர்ச்சியும் வருகிறது. குருப்பெயர்ச்சி 13-6-2014-ல். மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு மாறுவார். கடகம் சிம்ம ராசிக்கு 12-ஆம் இடம். அங்கு குரு  வருவது ஒரு வகையில் கெடுதல். 1 2-ல் குரு வரும்போது "இராவணன் முடியற்று வீழ்ந்தான்' என்பது ஜோதிடப் பாடல். 

அதனால் சிம்ம ராசிக்காரர்களின் பதவி, வேலை, உத்தியோகத்தில் சிக்கலும் பிரச்சினையும் உண்டாகலாம். சிம்ம ராசிக்கு 5, 8-க்குடைய குரு 5-ஆம் இடத்துக்கு 8-ல் மறைவு. ராசிக்கும் 12-ல் மறைவு. 8-ஆம் இடத்துக்கு திரிகோணம் என்பதோடு 8-ஆம் இடம் மீனத்தையும் 9-ஆம் பார்வை பார்க்கிறார். அதனால் கௌரவப் போராட்டம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வழக்கு விவகாரங்களில் தோல்வி, ஏமாற்றம், இழப்பு, நஷ்டம் ஏற்படலாம். கவலையும் கலக்கமும் உண்டாகலாம். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்று எதிர்மறைப் பலனை சந்திக்கலாம். 

கடக குரு உச்சமாக இருந்து சிம்ம ராசிக்கு 4-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும் பார்க்கக்கூடும். 4-ஐ பார்ப்பதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். படிப்பில் தடை இருக்காது. மேற்படிப்பு முயற்சிகளும் கைகூடும்.

6-ஆம் இடம், 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கவலை, கடன், போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளும் அதனால் பிரச்சினைகளும் ஏற்பட்டு விலகும்.

ராகு- கேது பெயர்ச்சி:  21-6-2014 -ல் ராகு- கேது பெயர்ச்சி துலா ராசியில் நிற்கும் ராகு கன்னி ராசிக்கும், மேஷ ராசியில் நிற்கும் கேது மீன ராசிக்கும் மாறுவார்கள். சிம்ம ராசிக்கு 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் மாறுவதால் பேச்சில் -வாக்கில் நிதானம் தேவை. "ஒரு வார்த்தை கொல்லும்- ஒரு வார்த்தை வெல்லும்' என்பார்கள். கன்னி ராகு கடக குருவைப் பார்க்கும். கடக குரு மீன கேதுவைப் பார்க்கும். குரு சம்பந்தம் பெறுவதால் கடுமையும் வேகமும் குறையும்.

சின்னமனூர் வழி- குச்சனூர் (வட குருஸ்தலம்) சென்று வழிபடலாம். உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்டு அருகில் தென் காளஹஸ்தி எனப்படும் சிவன் கோவில் உண்டு. இங்கு ராகுவுக்கும் கேதுவுக்கும் தனித்தனி சந்நிதி உண்டு. ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை ராகு கால வேளையில் ராகுவுக்கும் கேதுவுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜை நடக்கும். அங்கு சென்றும் வழிபடலாம். 

குரு வக்ரம்: 24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம். 2014 ஆண்டு தொடக்கத்திலேயே குரு வக்ரமாகத்தான் இருப்பார். லாப ஸ்தானத்தில் குரு வக்ரப்படுவதால் லாபம் உண்டு; வெற்றி உண்டு; நன்மையுண்டு; அனுகூலம் உண்டு.

குரு அஸ்தமனம்: 6-7-2014 முதல் 5-8-2014 வரை குரு அஸ்தமனம் அடைவார். அக்காலம் குரு கடகத்தில் இருப்பதால் மைனஸ் ல மைனஸ் = பிளஸ் என்பதுபோல, கெடுபலன் மாறி நற்பலன் பெருகும். 

சனி வக்ரம்: 1-3-2014 முதல் 28-6-2014 வரை துலாச் சனி வக்ரத்தில் இருப்பார். ஜெனன காலத்தில் சனி வக்ரமாக இருக்கும் ஜாதகர்களுக்கு இக்காலம் மேன்மையும் யோகமுமாக இருக்கும். சனியின் வக்ரகாலத்தில் சனிக்கிழமை தோறும் அவரவர் வயதுக்குரிய எண்ணிக்கையோடு ஒன்றுசேர்த்து அத்தனை மிளகை சிவப்புத் துணியில் கட்டி காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபம் ஏற்றவும். மதுரை அருகில் திருவாதவூரில் சிவன்கோவிலில் கால பைரவர் சந்நிதியும், அருகில் சனீஸ்வரர் சந்நிதியும் உண்டு. சனி பகவானின் குருநாதர் பைரவர். அந்த ஊரில்தான் சனீஸ்வரருக்கு வாதநோய் வந்து விலகியதாக ஐதீகம். மாணிக்கவாசகப் பெருமான் பிறந்த ஊர். அங்குசென்று வழிபடலாம். 

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி 


மாத முற்பகுதியில் மனதில் குடிகொண்டு பயமுறுத்திய எண்ணங்கள் யாவும் பிற்பகுதியில் பறந்தோடிவிடும். கடன்கள் மறையும். கஷ்டங்கள் கரையும். துன்பங்கள் தொலையும். இன்பங்கள் பெருகும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் அமையும். 

பிப்ரவரி 


படிக்கும் மாணவர்களுக்கு ஆர்வம், அக்கறை உண்டாகும். விடாமுயற்சி வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். கடலூர் அருகில் திருவந்திபுரம் சென்று ஹயக்ரீவரை வழிபடவும். ஹயக்ரீவர் மந்திரம் ஜெபம் செய்யலாம். "ஓம் ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே'- இதுதான் ஹயக்ரீவர் மந்திரம்.

மார்ச் 


வியாபாரிகளுக்கு டென்ஷன் ஏற்படுத்தும் மாதம். மாணவர்களுக்கு படிப்பு -பரீட்சை என்று உழைப்பு அதிகமாக இருக்கும். குடும்பஸ்தர்களுக்கு விலைவாசி ஏற்றத்தால் விரக்தி ஏற்படும் காலம். மங்கள காரியங்களும் சுப விரயங்களும் உண்டாகும். தேக சுகத்தில் தெளிவு ஏற்படும். இனிய மாதம்தான்.

ஏப்ரல் 


தமிழ் புதுவருடம் ஜய வருடம் பிறக்கும் மாதம். குடும்பத்தில் எதிர்பாராத மங்கள நிகழ்ச்சிகளும் சுப விரயங்களும் உண்டாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகும். பணத்தேவையை விட இப்போது உங்களுக்கு நம்பிக்கையும் தைரியமும்தான் அவசியம்.

மே


வழக்கம்போலவே எல்லாக் காரியங்களும் செயல்படும். எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகள் வெற்றியடையும். தொலைதூரத்திலிருந்து நல்ல சேதிகள் தேடிவரும். பொருளாதாரம் தாராளமாக இருக்கும். 

ஜூன் 


இந்த மாதம் 13-ம் தேதி குருப்பெயர்ச்சி. 12-ல் உச்சம் பெறுவதால் செலவுகள் கூடும். பிள்ளைகள் வகையில் சுபச் செலவு, நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேறும். நியாயமான ஆசைகளும் நிறைவேறும். மனதில் மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும். 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. துலா ராகு கன்னிக்கும், மேஷ கேது மீனத்துக்கும் மாறுவார்கள். வேலை அல்லது இடப்பெயர்ச்சிக்கான வாய்ப்பு உண்டாகும். சுபச் செலவுக்கு கடன்படும் சூழ்நிலை ஏற்படலாம்.

ஜூலை 


வெற்றி வாய்ப்பு உண்டு என்றாலும், எந்த ஒரு காரியத்தையும் சிரமத்துடன் நிறைவேற்ற வேண்டும். கொடுக்கல் -வாங்கல், வரவு- செலவுகளில் நெருக்கடி நிலை ஏற்படலாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பொறுமையாக, நிதானமாக சமாளிக்க வேண்டும். தெய்வ வழிபாடு உங்களைக் காப்பாற்றும். குரு அஸ்தமனம். குருவையும் வழிபடவேண்டும்.

ஆகஸ்டு 


கவலைகளும் கடமைகளும் பொறுப்புகளும் கடன்களும் அதிக சுமையாக இருந்தாலும், பரிகார பூஜைகள் உங்களை வழிநடத்தும். கர்ப்பஸ்திரீக்கு பிள்ளையைச் சுமப்பதில் பேரானந்தம் ஏற்படுவதுபோல, சிலநேரம் சுகமான சுமைகளாக அமையும். வட்டிவாசிகளைக் குறைத்து கடன்களை அடைக்க புதிய திட்டங்களும் வழிகளும் தோன்றும்.

செப்டம்பர் 


மாபெரும் மாறுதல்களுக்கு இடமில்லை என்றாலும், நாளுக்கு நாள் -படிப்படியாக சிரமங்கள் குறையும். வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படுவதால் எதிர்கால இனிமையை நோக்கிப் பயணிக்கலாம். நம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். செயல்களில் ஆர்வமும் அக்கறையும்  உருவாகும்.

அக்டோபர்


வரவும் உண்டு; செலவும் உண்டு. ஆடை, ஆபரணச்  சேர்க்கைகள் உண்டு. பற்றாக்குறையைச் சமாளிக்க கடன் வாங்கும் கட்டாயமும் ஏற்படும். கொடுக்கல் -வாங்கல், வரவு- செலவு குறிப்பிட்ட மாதிரி நடந்தேறும்; குறைவிராது. அக்கம்பக்கம் திருஷ்டி அதிகமாக இருப்பதால் சூலினிதுர்க்கா ஹோமமும், திருஷ்டிதுர்க்கா ஹோமமும் செய்வது நல்லது. 

நவம்பர் 


சுக்ரன் அஸ்தமனம் என்பதால் தொழில்,  வேலையில் பிரச்சினை, டென்ஷன் ஏற்படலாம். வேலையாட்கள், சிப்பந்திகள் ஒத்துழைப்பில் சங்கடம், சஞ்சலம் ஏற்படும். அதனால் குடும்பத்திலும் நிம்மதிக் குறைவு ஏற்படலாம். குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார்ஜூன யந்திரத்தையும் பூஜை செய்யவும். 

டிசம்பர்


பெண்கள் வகையில் கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் நடந்துகொள்ள வேண்டும். வீண் அபவாதங்கள் அல்லது அவப்பேர் எடுக்க வாய்ப்புண்டு. டிசம்பர் கடைசியில் சனிப்பெயர்ச்சி. உச்ச சனி 4-ல் மாறி ராசியைப் பார்க்கும் காலம். முன்னதாகவே பலன் செய்யும் காலம். சனிப்பெயர்ச்சிக்கு பரிகார பூஜை செய்வது நல்லது.

மக நட்சத்திரக்காரர்களுக்கு


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்துக்கு மூல நட்சத்திரம் 10-ஆவது நட்சத்திரம், அனுஜென்ம நட்சத்திரம். பிறந்த நட்சத்திரம் -ஜென்ம நட்சத்திரம்- அதற்கு 10-ஆவது நட்சத்திரம். அனுஜென்ம நட்சத்திரம். அதற்கு 10-ஆவது (ஜென்ம நட்சத்திரத்துக்கு 19-ஆவது) திரிஜென்ம நட்சத்திரம் எனப்படும். இது உத்தமம். 2014-ல் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். பெருமையும் புகழும் ஓங்கும். முயற்சிகள் யாவும் வெற்றிபெறும்.

பரிகாரம் : சிவகங்கை அருகில் (ஒக்கூருக்கும் நாட்டரசன்கோட்டைக்கும் நடுவில்) காளையார்மங்கலம் என்னும் ஊர். இங்கு மீனாட்சி சுந்தரேசுவர் கோவில் தெப்பக்குளம் அருகில்  வன்னிமரத்துப் பிள்ளையார் அருள்  பாலிக்கிறார். அவருக்கு பொரி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா காரியங்களும் வெற்றியடையும். விவரங்களுக்கு எஸ்.பி. கண்ணப்ப செட்டியார், செல் : 97102 10070.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், உங்கள் நட்சத்திரத்துக்கு அது 9-ஆவது நட்சத்திரம் பரம மைத்ரம். எனவே இவ்வருடம் தேக ஆரோக்கியம், மனத்தெளிவு, உற்சாகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, குடும்பத்தாருடனும் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் நல்ல உறவு, நண்பர்கள் உதவி  போன்ற அனுகூலமான பலன் உண்டாகும். 

பரிகாரம் : ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் கோவில் சென்று வழிபடவும். ரங்கமன்னாருக்கு வலப்புறம் ஆண்டாளும் இடப்புறம்  கருடாழ்வாரும் நிற்பது விசேஷம்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு


உங்கள் நட்சத்திரத்துக்கு 2014-ஆம் வருடம் பிறக்கும் மூல நட்சத்திரம் 8-ஆவது நட்சத்திரம். மைத்ர தாரை -நட்பு தாரை. எனவே 2014 உங்களுக்கு நன்மையும் மேன்மையும் தரும் வருடமாக அமையும். கடந்த வருடத்தில் அனுபவித்த கவலைகளும் துன்பங்களும் தூர விலகிப்போகும். உத்திரம் சிம்ம ராசிநாதன் சூரியனின் நட்சத்திரம். புகழும் பொருளும் போற்றுதலும் உண்டாகும். 
பரிகாரம் : சென்னை- செங்குன்றம் அருகில் ஞாயிறுகோவில் சென்று புஷ்பரதேஸ்வரரை வழிபடவும். கருப்பு உளுந்தில் வடை மாலை தயார் செய்து அணிவித்து பூஜை செய்தால் ராகு- கேது தோஷம் நிவர்த்தியாகும்.

No comments:

Post a Comment