அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/6/13

ஜெய் தேவாங்கா........... ஜெய் ஜெய் தேவாங்கா..................

ஜெய் தேவாங்கா
ஜெய் ஜெய் தேவாங்கா

அம்மா செளடாம்பிகை தாயே
எங்கள் குலம் காக்க வந்த அன்னையே

நீ ஆவேசத்துடன் வந்து எங்களை காத்த இந்த
ஆடி அமாவாசையில்
உன்னை வழிபட்டு கொண்டாடுகிறோம் தாயே

உன் வருகைக்காக நாங்கள் இரத்தம் வழிய
உடலை வருத்திக்கொண்டாலும்
சந்தோஷமாக ஆனந்த கூத்தாடுகிறோம் தாயே

நம் குலத்தின் நன்மைக்காக
முன்நின்று உழைத்திடும் நமது குல
ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும்
சோதனைகளை கொடுக்காமல் அவர்களுக்குள்
போட்டி பொறாமைகள் வராமல் அவர்களுக்கு
நல் வாழ்வு கொடுத்து அவர்கள்
மேலும் சிறப்புடன் செயல்பட
உத்வேகத்தை கொடுங்கள் தாயே

உன்னை அன்னையாக நினைத்து வழிபடும்
தேவாங்க குல மக்கள்
சிறப்புடன் குலம் பெருக்கி
நல் வாழ்வு வாழ அவர்களின்
இன்னல்களை நீக்கி அனைவருக்கும்
நல் ஆசிகள் வழங்கிடு தாயே
தாயே செளட தாம்பா

S.V. ராஜ ரத்தினம்
கரூர்.

கீழே உள்ள படங்களில்
1.தாராபுர ஸ்தலம், காரியமங்கலம் ஸ்தலம், ஒஸக்கோட்டை ஸ்தலம்,
அமரகுந்தி ஸ்தலம். நான்கு ஸ்தல அம்மன்கள்.
2.மதுரை- செளடம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஒமகுண்டத்தில் தோன்றிய அம்மன்.
3.அருப்புக்கோட்டையில்- ஶ்ரீ தயானந்தபுரி சுவாமிக்கு கொடுத்த வரவேற்பு.
4.அருப்புக்கோட்டை-அம்பது ஊர் பட்டத்து எஜமானர் ஶ்ரீவேல்முருககிருஷ்ணன் அம்மனை ஹோமகுண்டத்தை சுற்றி கொண்டு வருதல்.
 

No comments:

Post a Comment