அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/17/13

ஸ்ரீ ஹேமகூட மடம்

தேவாங்கரின் மூன்றாவது ஜகத்குரு பீடம் ஸ்ரீ ஹேமகூட மடமாகும்.கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் ஹொசப்பேட்டைக்கு ஏழு கல் தூரத்தில் பம்பா ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ ஹம்பி ஹேமகூட மடத்தை ஸ்தாபிதம் செய்தவர் மநு மஹரிஷி கோத்ரம் ஏகோராமர் ஆவார். மனு மஹரிஷி கோத்ரம் ‘நாகாபரணதவரு’வங்குசத்தைச் சார்ந்தவர்களே வம்ச பாரம்பரியமாய் இப்பீடத்தின் ஜகத்குரு ஆகலாம்.
        விதுராஷ்வந்தம் முதல் நாசிக் பஞ்சவடி வரை இம்மடத்தின் எல்லைகள்
. இம்மடத்தின் சிம்மாசனம் பெனுகொண்ட சிம்மாசனம். இச்சிம்மாசனம் எலுகொண்ட சிம்மாசனம், வெலிகோட்டி சிம்மாசனம், வெரிகோட்டி சிம்மாசனம் என்றும் அழைக்கப்பெறும்.

தேவலர் காலம் முதல் ஏழாவது அவதாரமான தேவதாச மைய்யன் காலம் வரை அரசபீடமும் குரு பீடமும் ஒன்றாகவே இருந்து வந்தன. இதன்பின் அரசபீடமும் குரு பீடமும் தனித்தனியே ஆயின. குருவே அரசராக இருந்த நிலைமாறி அரசபீடமும், குருபீடமும் தனித்தனி ஆயின. இம்மாற்றம் ஏகோ ராமர் காலம் முதல் ஏற்பட்டது.   
        இதன்பின் ஸ்ரீஹம்பி ஹேமகூட காயத்ரிபீட ஜகத்குருவாக சகல சாத்திர வித்தகரான ஓம்ஸ்ரீமுத்துசங்க மாமுனிவர் இருந்துவந்தார்
.இவர் விவாகம் செய்து இல்வாழ்க்கை மேற்கொள்ள,இவரின் தம்பிமார்கள் தாம் திருமணம் செய்துகொள்ளாமல் மூத்தவரான ஜகத்குருவிற்குச் சேவை செய்து வந்தனர்.முத்துசங்கமா முனிகள் என்ற பெயரையே அடுத்தடுத்துப் பட்டம் பெற்றவர்கள் அபிஷேகத் திருநாமமாகக் கொண்டனர்.
இறுதியாக வந்த ஓம்ஸ்ரீமுத்து சங்க மாமுனிவரவர் பிரம்ம ஞானம் எய்த தவம் புரியச் சென்றுவிட்டார்.
குருபீடம் தக்க அதிபதி இல்லாமல் காலியாக இருந்தது.இத்தருணத்தை வீரசைவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். தேவாங்கர் சிலரை வீரசைவர்காளக மதமாற்றம் செய்தனர். அவர்கள் பூணூலில் சிவலிங்கம் அணிந்து கொண்டனர்.வேறு மதத்தினர் சிலரும் தேவாங்கரிடையே கலகம் விளைவித்துக் கட்டாய மதமாற்றம் செய்யத் தொடங்கினர்.
இச்சிக்கலான காலத்தில் தோன்றிய விடிவெள்ளியே கங்காவதி கிராமத்தில் அவதரித்த மகாபுருஷர் பணிகௌடர் ஆவார்.
தெலுங்கு மொழியில் ‘ஸேனாதிபதி‘ என்ற சொல் செட்டிகாரரைக் குறிப்பது போல் கௌடர் என்னும் சொல் கன்னட மொழியில் செட்டிகாரரைக் குறிக்கும்.ஸ்ரீசௌடேஸ்வரி அம்மனிடம் பரமபக்தி கொண்டு நம்குலத்தொழிலான நெய்யும் தொழிலைச் செய்து வந்தார் பணிகௌடர். தர்க்கம், மீமாம்சம் முதலான சாஸ்திரங்களில் நிபுணரான அவர்,தேவாங்க தர்மம் உயர்ந்தது. தேவலமதம் பழமைமிக்க சனாதன மதம் தர்மமார்க்கம் மிக்கது.நம் குருபரம்பரை காலம் கடந்தது
என்றும் வீரசைவர்களுடன் விவாதித்து வந்தார்.
இதனை ஏற்காத வீரசைவ குருவான பசவேஸ்வரர் விஜய நகர சாம்ராஜ்யம் ஆனெகுந்தி சமஸ்தான அதிபதி வீரப்ரதாப ராமராயரிடம் தேவாங்கர் பற்றியும் பணிகௌடரைப் பற்றியும் முறையிட்டார். தேவாங்க குலம் குருவில்லாக்குலம் என பசவேஸ்வரர் வாதித்தார் மன்னனிடம்.
பணிகௌடர் அரசவை வரவழைக்கப்பட்டார்.மன்னர் அவரிடம் தேவாங்க குலம் பழமையானது, சனாதன தர்மம் உடையது என்று நிலைநாட்டுவதுடன் தேவாங்ககுல குருவையும் அரசவைக்கு அழைத்து வந்து காட்ட வேண்டும் என ஆணை இட்டார்.
மன்னரிடம் பணி கௌடர் தவணை பெற்றார். தேவாங்க குருவைத் தேடி அலைந்தார். பின் தம்மூரான கங்காவதி கிராமத்தின் அருகில் அடர்ந்த ஆரணியம் சூழ்ந்த “மழை மல்லப்பா ” மலைக்குகையில் கடுந்தவம் புரிந்தார்.பின் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என நம் குலத்திற்காக அவர் உயிர்தியாகம் செய்ய முடிவெடுத்தபோது பாணி கௌடரின் தவத்திற்கு மகிழ்ந்த ஸ்ரீமுத்து சங்க மாமுனிவர் அவருக்குக் காட்சி தந்தார்.
அருள் சுரக்கும் நயனங்கள்,ஒளி பொருந்திய திருமுகம் நீண்ட சடாமுடி,தண்டு கமலத்துடன் புனித தவக்கோலத்துடன் மாமுனிவரின் காட்சி திகழ்ந்த்து.
பணிகௌடரின் வேண்டுகோளால் அவருடன் ஓம் ஸ்ரீமுத்து சங்க மன்மகா முனிவர் வீரப்பிரதாபராமராயர் ஆஸ்தான மண்டபம் எழுந்தருளினார்.

No comments:

Post a Comment