அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/12/13

கங்கணம் கட்டுதலின் விதிமுறைகள் [ காப்பு ]

கங்கணம் கட்டுதல் :-

 முதன் முதலில் தேவலர் தறியில் அமர்ந்து துணிகளை நெய்ய ஆரம்பிக்கும் முன் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனை தியானித்தார். அம்மனும் தோன்றி தன் கையில் இருந்த நவரத்ன கங்கணத்தை தேவலரின் கரத்தில் அணிவித்து "இனி எந்த காரியத்தையும் சுலபமாக முடிக்கும் ஆற்றலை பெறுவாய்" என்று ஆசீர்வதித்து மறைந்தார்.

              இதனை மனதில் கொண்டுத்தான் அனைத்து சுப காரியங்களுக்கும்.  ஆரம்பிக்கும் முன் அம்மனை நினைத்து கங்கணம் கட்டிக்கொள்கிறோம். கங்கணம் கட்டிக்கொண்டு ஆரம்பிக்கும்  செயல்களுக்கு எந்த இடையூறும் ஏற்ப்படாது.
              கோயில் விசேஷத்திற்கு விரதம் இருப்பவர்கள் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டிய முறைகள்.
  
               கங்கணம் என்பது விரலி மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் வெற்றிலை ஒன்றை மடித்து  சேர்த்து கட்டி அதை வலது கையில் கட்ட வேண்டும் அதன் மேல்  மஞ்சள் துணியால் விரலி மஞ்சளும் ,வெற்றிலையும் தெரியா வண்ணம் கட்டிகொள்ள வேண்டும் .இந்த கங்கணத்தை செட்டியார் ,பூசாரி கட்டி விட வேண்டும் .இதை கோயில் விழாவிற்கு 13 நாட்கள் முன்பிருந்து கடைசி நாள் வரை கட்டிக் கொள்ளலாம்.

விதி முறைகள் :-
     
 1.  காலை ,இரவு  இரண்டு நேரம் குளிக்க வேண்டும் 
 2.  காலணிகள் போட்டு நடக்கக்  கூடாது 
 3.  திருமணம் ஆனவர்கள் தனியாக படுக்க வேண்டும் 
 4.  கட்டிலில் படுக்கக் கூடாது தரையில் புதிய பெட்சீட்களை விரித்தும் தலைக்கு தலைகானி பயன்படுத்தாமல் புதிய பெட்ஷீட்களையே தலைக்கும் வைத்து  பயன்படுத்த வேண்டும் அல்லது  பழைய ,புதிய மஞ்சள் வேஷ்டி ,சேலைகளை விரிபுக்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். 
 5.  சாப்பிடும் தட்டு விரத நாட்களில் மட்டும் பயன்படுத்தும் தட்டு இருந்தால் அதில் சாப்பிடலாம் அல்லது வாழை இலை போட்டு சாப்பிட வேண்டும் 
 6.  நம் வீட்டில் நம் ஒருவர் மட்டும் கங்கணம் கட்டியிருந்தால் சாப்பாடு வகைகளை சமைத்தவுடன் தனியாக எடுத்து வைத்துவிட்டு பிறகு மற்றவர்கள் தொட வேண்டும்.  தூரமான பெண்கள் சமைத்த உணவை சாப்பிடக் கூடாது 
  7.  அடுத்தவர் வீட்டில் தண்ணீர் கூட அருந்தக்கூடாது 
  8.  ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் சாப்பிடக் கூடிய அவசியம் ஏற்பட்டால் வெஜிடேரியன் ஹோட்டலில் மட்டுமே சாப்பிட வேண்டும் வாழையிலை போட்டு சாப்பிட வேண்டும் 
  9.  கடைகளில் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும் தவிர்க்க முடியாத நேரங்களில் புதிய டீ  கப்பில் அருந்தவும்

10. துக்க காரியங்கள், ருது சடங்குகள் இவற்றில் கலந்து கொள்ளக் கூடாது.

No comments:

Post a Comment