அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/5/13

ஸ்ரீ வீரமல்லம்மாள் துணை

ஸ்ரீ வீரமல்லம்மாள் துணை
சக்தி அழைத்தோம் அம்மா வீரமல்லமா ...
சித்திரையில் நோன்பிருந்து
வளர்பிறை புதனில்
அழகிய திருவளர் திம்மராயம்பதியிலே ....
பவானி ஆற்றின் கரையிலே ...
ஒய்யாரமாய் உனக்கு பந்தலிட்டோம் கரும்பிலே .....
வெல்லத்தில் கோட்டை கட்டி !
வெற்றிலையில் தோரணம் அமைத்து !!
பலவித கரகம் ஜோடித்து .....
பேழையிலே உன்னை கொலுஅமர்தி ...
அலகு வீரர்கள் தெண்டகங்கள் சொல்ல ....
பெண்மக்கள் எல்லாம் உன்னை வேண்டி தொழ ......

வீரர்கள் உன்னை சக்தியாய் பேழையிலே ஏந்தி ...
குழந்தையாக நீ அடம்பிடிக்க !
உதிரம் சொட்ட கத்தி இட்டு
ஊரெல்லாம் உன்னை சுற்றி ...
கோவில் அடைந்து .... மகா பூசனைகள் செய்து
இருமனேர் குலம் தழைக்க...
எண்ணுமக்கள் எல்லாம் வளம் பெற .....
மகா ஜோதியை ராகு தீபமாய் எடுத்து
உனக்கு சீராக படைத்து உன்னை வேண்ட!!!
சகல குலங்களையும் வாழவைக்கும் சௌடேஸ்வரி நீ !
பெரியவீட்டுகாரர் பட்டம் பெற்ற ...
இருமனேர் குல மகள் ஸ்ரீ வீரமல்லம்மாள் ஆக அருள் புரிவாயே !!!
- ர.பார்த்திபன்
பொள்ளாச்சி

No comments:

Post a Comment