அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/24/14

சாமி அலங்காரப்பாட்டு------- (முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)


பாடியவர்கள்
செல்வி. R. பவித்ரா.
செல்வி. S. கீர்த்தனா
இசை – திரு. நித்திஷ் செந்தூர்

சாமி அலங்காரப்பாட்டு

தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே

தாழை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
தாழம்பூ பூத்ததை பாருங்கம்மா
தாழம்பூ பூத்ததை பாருங்கம்மா
தாழம்பூ போலவே நம்ம சவுண்டம்மா
தலை அலங்காரம் பாருங்கம்மா

நெல்லிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
நெல்லிப் பூ பூத்ததை பாருங்கம்மா
நெல்லிப் பூ பூத்ததை பாருங்கம்மா
நெல்லிப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
நெத்தி வரிசையை பாருங்கம்மா

பாத்சரம் மம்மா பாதசரம் – தாயே
பத்து விரலுக்கும் பாதசரம்
பத்து விரலுக்கும் பாதசரம்
இருட்டு நாட்டிலே போட்டு நடந்திட்டா
எங்கும் ஜொலித்திடும் பாதசரம்.

கோவை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
கோவைப்பு பூத்ததை பாருங்கம்மா
கோவைப்பு பூத்ததை பாருங்கம்மா
கோவைப்பூ போலவே தாயி சவுண்டம்மா
கொண்டை அலங்காரம் பாருங்கம்மா

குறிஞ்சிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
குறிஞ்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
குறிஞ்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
குறிஞ்சிப்பூ போலவே நம்மு சவுண்டம்மா
பல்லின் வரிசையைப் பாருங்கம்மா.
மான் கூவும் நல்ல மயில் கூவும் – தாயே
வன்னி மரத்துக் குயில் கூவும்
வன்னி மரத்துக் குயில் கூவும்
கொண்டை பெருத்தவ நம்ம சவுண்டம்மா
கொண்டை மேலே ரெண்டு கிளி கூவும்.

பாகை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
பாகைப்பூ பூத்ததை பாருங்கம்மா
பாகைப்பூ பூத்ததை பாருங்கம்மா
பாகைப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
பாத சிலம்பணி பாருங்கம்மா

முல்லை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
முல்லைப்பூ பூத்ததை பாருங்கம்மா
முல்லைப்பூ பூத்ததை பாருங்கம்மா
முல்லைப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
முக அலங்காரம் பாருங்கம்மா.

பிச்சிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
பிச்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
பிச்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
பிச்சிப்பூப் போலவே நம்ம சவுண்டம்மா
பின்னல் வரிசையைப் பாருங்கம்மா

தாமரை கொடியை பாருங்கம்மா – தாயே
தாமரைப் பூத்ததை பாருங்கம்மா
தாமரைப் பூத்ததை பாருங்கம்மா
தாமரைப் போலவே நம்ம சவுண்டம்மா
தன்னெழில் தோற்றமும் பாருங்கம்மா.

தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே

No comments:

Post a Comment