அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/7/14

தாய் ஸ்தலம் தாராபுரம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு விழா புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு

தாய் ஸ்தலம் தாராபுரம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் சங்கு அபிஷேகம். புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு "சகர மொதனூரு 
பெனுகொண்ட படவேடு 
தாராபுரத்தில் தாய் ஸ்தலமாய்...." 

        திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரண்டாம் ஆண்டு விழாநடைபெற்றது. தமிழகத்தில் பருவமழை பெய்ய வேண்டும், வறட்சி நீங்கி விவசாயம் செழித்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக தாய் ஸ்தலப் பட்டக்காரர் கோவிந்தராஜ் தலைமையில் விக்னேஸ்வர பூஜை மற்றும் 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது .

வீடியோ தொகுப்பு :  பத்தேவு முழக்கத்துடன்  அலகு வீரர்களின் அலகுசேவை 


video 1:  ஆதி சவுண்டம்ம நீனு.....பத்தேவு


video 2:


video 3:

video 4:

video 5:

video 6:

நமது தேவாங்க குலத்தில் ஆண்கள் அலகுசேவை செய்து அழைத்து வந்த அன்னையை மிகவும் ஒய்யாரமாக கொலுவைத்து விட்டு நம் குல பெண்மக்கள் (எண்ணு மக்கள் )  எப்படி தங்கள் மகள் வீட்டிற்கு வந்தால் கொண்டாடுவார்களோ அதே உற்சாகத்தோடு தாய் ஸ்தல  சவுண்டம்மன் வந்துவிட்டாள்.... என்ற மகிழ்ச்சியில் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்....... 

"தந்தன நாதினும் ...தந்தன நாதினும் ...தந்தானே .....
வெள்ளகுதிரையிலே சவுண்டம்மா ஏறிவரும்போது ...."

video 7:

video 8:

video 9:
video 10:
சில புகைப்பட தொகுப்பு:


பெண்கள் சுற்றி நின்று வட்டகும்மி  அடிப்பதற்கு பூரண கும்பம் ,.. 
"தும்பிது கும்ப நீரு....."

நன்றி செல்வி.மேனகா ராமசாமி  மற்றும்  செல்வன். கோகுல்  , தாராபுரம்

No comments:

Post a Comment