அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

9/27/13

கன்னட மொழி

கர்நாடக மாநிலம், மராத்தி நாட்டின் தென் பகுதியில் பேசப்படும் மொழி கன்னட மொழி ஆகும். கருநாடகம் என்றும், கானரிஸ் என்றும் கூறுவர். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் கன்னட மொழி பேசுகின்றனர். கர்நாடகம் என்னும் வடசொல் திரிந்து, கன்னடம் என்றானது என்பர் வடநூலார். ‘கன்னடம்’ என்பது ‘திராவிடச் சொல்’ என்பார் டாக்டர் குண்டர்ட். கன்னடத்தில், பழங்கன்னடம், புதுக் கன்னடம் என்னும் இரு வகை உள்ளன. புதுக் கன்னடத்தின் எழுத்து முறை தெலுங்கு மொழியின் எழுத்து முறையை ஒட்டி அமைந்துள்ளது என்பார் ஏ.எஸ். ஆச்சார்யா. அவர் பல ஆய்வுகள் செய்துள்ளார். எச்.எஸ். பிலிகிரி (H.S. Biligiri) கன்னட மொழியின் ஒலியன்களைப் பற்றி ஆராய்ந்துள்ளார். கன்னட மொழியின் வட்டார வழக்குகளில் ஒன்று தேவாங்கா கன்னடம் ஆகும். தமிழகத்தில் உள்ள சின்னாளப்பட்டி, அருப்புக்கோட்டை பகுதிகளில் வாழும் தேவாங்கா செட்டியார் தேவாங்கா கன்னடம் பேசுகின்றனர். தமிழ்ச் சொற்களை ஏற்று, தமிழுடன் நெருங்கிய தொடர்பு உடையதாக இம்மொழி உள்ளது. மைசூர்ப் பகுதியிலுள்ள கன்னட மொழியிலிருந்து தேவாங்கக் கன்னடம் வேறுபடுகிறது. கன்னடத்தின் மற்றொரு வட்டார வழக்கு கௌடா கன்னடம் ஆகும். இதில் 14 உயிரொலிகள் (9 குறில் 5 நெடில்) 22 மெய் ஒலிகள் உள்ளன என்று டாக்டர் கே. குசலப்பா கௌடா குறிப்பிடுவார். கர்நாடகத்தின் தென் பகுதியிலும், கூர்க் மாவட்டத்திலும் வாழும் கௌடர்கள் பேசும் மொழி கௌடா கன்னடம் ஆகும். 1968இல் கன்னட மொழியை ஆராய்ந்த போசிரியர் உபாத்தியாயா கன்னட மொழியின் நான்கு வட்டார வழக்குகளை ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார். கன்னட மொழியின் பேச்சு வடிவம் பற்றிப் பேராசிரியர் வில்லியம் பிரைட் (William Bright) விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
                                                                                                                                                         நன்றி,
                                                                                                                                                      திரு. A.தியாக ராஜன்

No comments:

Post a Comment