அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/27/13

மதுரை மாநகர் ஸ்ரீ சௌடேஸ்வரி தேவாங்கர் மகாஜன அறக்கட்டளை.மதுரை.
மஹா கும்பாபிஷேகம் 

 மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரை மாநகரில் நமது சௌடேஸ்வரி அன்னையின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . தேவாங்க குல ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயனந்தபுரி சுவாமிகள் திருக்கரத்தால் கும்பாபிஷேகம் நடத்திவைத்தார்.

 அக்கினியில் தோன்றிய நம் குல அன்னை சௌடேஸ்வரி :
கும்பாபிஷேகம் காண வந்த மக்கள் கூடத்தில் ஒருபகுதி  

 அம்மனுக்கு ஊர்வலமாக சீர்வரிசை கொண்டுவரும் நம் குல பெண்மக்கள்:


நம் அன்னைக்கு திருக்கல்யாணம் நடைபெறும் காட்சி 


நம் அன்னையை தேவாங்க குல முறைப்படி சக்தி யாக கரகத்தில் எழுந்தருளச்செய்து கையில் சாமுண்டி ஜம்தாடு கத்தி ஏந்தி வைகை கரையில் இருந்து  கோவிலுக்கு அலகுசேவை செய்தபடி அழைத்து வரும் நம் குல அலகுவீரர்கள்நமது குலம் வாழவைக்கும் அன்னை சௌடேஸ்வரிக்கு அழகான முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வருதல் ..........

.பழமை மாறாமல் கும்மியடித்து அன்னைக்கு முளைப்பாரி படைக்க பட்டகாட்சி

பெண்கள் தங்கள் வாழ்வு சிறக்க அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடத்திய பெருங்காட்சி

திருவிழா சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் ஆடிக்களைக்கும் நம் குல மக்கள்திருவிழாவை  மிகவும் சிறப்பாக நடத்தி ,படங்களை நம்முடன் பகிர்ந்த மதுரை மாநகர் ஸ்ரீ சௌடேஸ்வரி தேவாங்கர் மகாஜன அறக்கட்டளை மற்றும் நம் நண்பர்களுக்கும் நன்றிகள் .......


No comments:

Post a Comment