அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/26/13

தேவாங்க சமூக தலைவர்களுக்கு...........

தேவாங்க சமூக தலைவர்களுக்கு...........


வணக்கம்.

இளைய தலைமுறை இளைஞர்கள், நம் சமூகம் ஒன்று பட்டு வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்களை போக்க வேண்டியது நம் சமூக தலைவர்களின் கடமை.

நம் குல தெய்வம் ஸ்ரீஇராமலிங்க செளடாம்பிகையை வீட்டில் வைத்து எந்த,எந்த ஊர்களில் கும்பிடுகிறீர்கள் என்று ‘FACE BOOK’ மூலம் சர்வே எடுத்தோம். அதில் பல ஊர்களில் வீட்டில் வைத்து கும்பிடுவது இல்லை என்றும். சில ஊர்களில் மட்டுமே வீட்டில் வைத்து கும்பிடு வதாகவும் சர்வே மூலம் தகவல் கிடைத்தது.

நமது குருஜீ ஸ்ரீதயானந்தபுரி சுவாமிஜி அவர்களிடம் கேட்ட போது நம் செளடம்மனை வீட்டில் வைத்து கும்பிடலாம். இதில் என்ன சந்தேகம் என்று கேட்டார்கள்.

பெரும்பாலான மக்கள் ஏன் வீட்டில் வைத்து கும்பிடுவதில்லை.

ஸ்ரீஇராமலிங்க செளடாம்பிகை அம்மனை வீட்டில் வைத்து கும்பிடுவதற்கு ஏதாவது விதி முறை இருக்கிறதா?. அப்படி விதிமுறை இருந்தால் அந்த விதிமுறைகளை தெரியபடுத்தும் படியும், குறிப்பிட்ட செளடம்மனின் படங்களை மட்டும் வைத்து கும்பிடலாம் என்றால் இது வரையிலும் பல ஏரியாக்களில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து ஸ்ரீஇராமலிங்க செளடாம்பிகை அம்மனின் படங்களையும் இத்துடன் அனுப்பி வைத்திருக்கிறோம். அதில் எந்த படம் வைத்து கும்பிடலாம் என்பதை அடையாள குறியிட்டு எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1, ஸ்ரீதயானந்தபுரி சுவாமிஜி அவர்கள், காயத்ரீ பீடம், திருமூர்த்திமலை.

2. அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீசெளடேஸ்வரி நற்பணி மன்றம்,சென்னை
.
3. சென்னை தேவாங்கர் மகாஜனசபை, வடபழனி, சென்னை- 26.

4. ஐம்பதூர் பட்டத்து எஜமானர் ஸ்ரீவேல்முருக கிருஷ்ணன் M.COM., அருப்புக்கோட்டை., மற்றும் ஐம்பதூர் நிர்வாக தலைவர்.

5. முப்பதூர் பட்டத்து எஜமானர் ஸ்ரீசிவானந்தம் [எ] மல்லி செட்டியார், கட்டங்குடி. அருப்புக்கோட்டை தாலுகா, விருதுநகர் மாவட்டம். மற்றும் முப்பதூர் நிர்வாக தலைவர்

6. வைணவ கடல் புலவர். திரு.மா.கிருஷ்ணமூர்த்தி, சேலம்.

7. க‌விஞர் திரு.பாப்ரியா B.A., சென்னை

இவர்களிடம் மேற்கண்ட விபரங்களை கேட்கலாம் என்று இருக்கிறோம்
மேலும் யார்,யாருக்கு இதை அனுப்பி வைக்க வேண்டும் என்பதை அந்த,அந்த ஊர்க்காரர்கள் விலாசத்துடன் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

விபரம் தெரியாதவர்கள் உங்கள் வீட்டு பெரியவர்கள் அல்லது சௌண்டம்மன் கோவிலில் கேட்டு தெரிய படுத்தவும் ...

friends pls comment with the persons name, address, phone no (if it is there)

No comments:

Post a Comment