அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/20/13

தகவல் சேகரிப்பு தேவாங்க குல மக்களுக்கு

தகவல் சேகரிப்பு
தேவாங்க குல மக்களுக்கு வணக்கம்.

இன்று தகவல் பரிமாற்றத்தால் நம் குல மக்களிடம் ஒரு எழுச்சியை காணமுடிகிறது. இதை வைத்து நாம் அனைவரும் ஒருங்கினைந்து செயல் பட முயற்சி செய்து பார்க்கலாம்.

நம் குல தெய்வமான ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மனை(photo)  சில ஊர்களில் வீட்டில் வைத்து கும்பிடுகிறார்கள். சில ஊர்களில் வீட்டில் வைத்து கும்பிட கூடாது என்கிறார்கள்.

நம் குல மக்கள் தங்கள் ஊர்களில் அம்மனை வீட்டில் வைத்து கும்பிடுகிறீர்களா, இல்லையா என்பதை ஊரின் பெயரை குறிபிட்டு தங்கள் ஊர்களில் எப்படி என்பதையும். கும்பிட்டுவது இல்லை என்றால். பெரியவர்களிடம் விசாரித்து காரணத்தை இதில் குறிப்பிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

சில ஊர்களில் சிம்மவாகனத்தில் அம்மன் இருப்பதால் வீட்டில் வைப்பதில்லை என்கிறார்கள். சில ஊர்களில் நாம் ஆச்சாரமாக இருக்க வேண்டும். அதில் சிறிய தவறு செய்தாலும் அம்மன் தண்டித்து விடுவார். என்ற பயத்தின் காரணமாக வீட்டில் வைப்பது இல்லை என்கிறார்கள்.

அனைவரும் இதில் கலந்து கொண்டு விபரம் தெரிவித்தால். அனைவரின் கருத்துக்களையும் நம் குல குருஜி, மற்றும் விபரம் அறிந்த நம் குல பெரியோர்களிடம் ஆலோசித்து அதற்குண்டான மாற்றங்கள் செய்ய முயற்சி செய்ய முடியும்.
-------  திரு.ராஜரத்தினம் ,கரூர்

No comments:

Post a Comment