அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/8/13

கண் திறந்த தாயில்பட்டி சௌண்டம்மன்

           சிவகாசியில் உள்ள தாயில் பட்டியில் இராமலிங்கபுரம் எரியாவில் இருக்கும் சௌண்டம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. 31.5.2013 வெள்ளிக்கிழமை அன்று சக்தி நிலை நிறுத்தும் விழா. முதல் நாள் 30.5.2013 வியாழக்கிழமை அன்று அபிஷேகம்  நடைபெற்றது.

          பால் அபிஷேகம்  நடந்த போது சௌண்டம்மன் கண் திறந்திருக்கிறார். அங்கிருந்த அனைவரும் பார்த்திருக்கிறார்கள். பூசாரி மிரண்டு போய் கோவிலை விட்டு வெளியே வந்து விட்டதாக சொல்கிறார்கள். மீண்டும் அம்மனை அலங்கரித்திருக்கிறார்கள். அப்பொழுது அம்மன் 1.30 நிமிட நேரம் வரை கண் திறந்திருந்த தாகவும், அந்த ஊரை சுற்றி உள்ள மக்கள் திரண்டு வந்து பார்த்தாகவும், போட்டோவும் எடுத்து கொண்டதாக பலர் சொல்கிறார்கள்.
நம் குல மக்களுக்காக அந்த அறிய புகைப்படம்  .
தாயில்பட்டி சௌண்டம்மன் கண்திறந்த அற்புதம் ...........
காணகண் கோடி வேண்டும் அம்மா........!!!!

No comments:

Post a Comment