அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

11/13/14

சனி பெயர்ச்சி பலன்கள் மிதுனம்: (2014 -2017)

சனி பெயர்ச்சி பலன்கள்
 மிதுனம்: (2014 -2017)




மிதுனம்: மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3

நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் கொண்டு அனைவரிடமும் அன்பாகப் பழக்கக்கூடிய சுபாவம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! உங்கள் இராசி அதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை ருண, ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளது  அதிர்ஷ்டங்களை அள்ளித்தரக் கூடிய அமைப்பாகும். இதனால் உங்களின் உடல் ஆரோக்கியமானது சுறுசுறுப்புடன் அமைந்து எல்லா பணிகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். சனி பார்வை  3,8,12 ஆம் வீடுகளுக்கு இருப்பதால் சிறுசிறு இடைய+றுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். இது வரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் ஒடும் எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று அவர்களின் திறமைகளும் வெளிப்படும். குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சி, எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, உங்களுக்கு இருந்து வந்த வம்பு,வழக்குகள் யாவும் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கண்ட கனவுகள் கூட அனைத்தும் நினைவாகும். வரும் நாட்கள் ஒரு பொற்காலமாக இருக்கும். 

சனி 6 இல் பலமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை குரு பகவான் தன ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் சனியும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை, வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு முயற்சி ஸ்தானமான 3 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சியில் சில இடையுறுகள் ஏற்படும் என்றாலும் சனி சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு 4 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அவை சுப செலவுகளாகவே இருக்கும். 02.09.2017 முதல் 04.10.2018 வரை குரு 5 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

உடல் ஆரோக்கியம்
     உங்கள் ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் உங்களின் உடல் நிலையானது மிகவும் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். மனைவி பிள்ளைகளும் நலமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் நலமாக இருப்பார்கள்.

குடும்பம்  பொருளாதார நிலை
     குடும்பத்தில் சுபிட்சமான நிலையும், மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களும் நடைபெறும். சிலர் நினைத்தவரையே கைபிடித்து மகிழ்வர் காதல் கைகூடுமா என ஏங்குபவர்களுக்கும் பெற்றோர்களே திருமணம் முடித்து வைப்பார்கள். பொன், பொருள், ஆடை, அபரண சேர்க்கைகளும் அதிகரிக்கும். கடன்கள் குறையும். புதிய மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

உத்தியோகம்
     உங்கள் ஜென்ம ராசிக்கு சனி பகவான் 6 இல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பணிபுரிபவர்கள் எதிர்பாராத வகையில் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தவர்களும் குடும்பத்தோடு சேருவதற்கான இட மாற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வுகளும் நிலுவைத் தொகைகளும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதார நிலையும் உயர்வடையும். உடன் பணிபுரிவர்களின்; ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும்.

தொழில் வியாபாரம்
     தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த நல்ல லாபத்தினைப் பெற முடியும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும், நல்ல லாபம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடையே இருந்து கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புடன் மகிழ்ச்சியினை உண்டாக்குவதோடு அபிவிருத்தியையும் பெற முடியும். புதிய நவீன கருவிகளையும் வாங்கி சேர்க்க முடியும்.

பெண்கள்
     பெண்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றக் கூடிய பொற்காலமாக அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொன், பொருள், சேர்க்கைகளும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளும் ப+ர்த்தியாகும். பணியில் உயர்பதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்
     பண வரவுகள் தாராளமாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை பெற முடியும்.

அரசியல்
     அரசியல்வாதிகள் மக்களின் அமோகமான ஆதரவினைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகள்  அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த மாண்புமிகு பதவிகளைப் பெற முடியும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரினை எடுக்க முடியும். வெளிய+ர் வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.

விவசாயிகள்
     விவசாயிகளுக்கு சிறப்பான மகசூல் உண்டாகும். மழை வளமும் மண் வளமும் விளைச்சலுக்கு கை கொடுக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கி விளைச்சலையும் பெருக்கிக் கொள்ள முடியும். புதிய பூமி நிலம் வாங்ககூடிய வாய்ப்பும் உண்டாகும். கால் நடைகளாலும் நல்ல லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும்.

மாணவ மாணவியர்
     கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மேலும் ஊக்கமளிப்பதாக அமையும். நண்பர்களின் ஆதரவு நற்பலன்களை உண்டாக்கும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு 7,10 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 2 இல் குரு வக்ர கதியிலும். 4 இல் இராகுவும் இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவினை உண்டாக்கும்.  கடந்த காலத்திலிருந்த சோதனைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் யாவும் விலகி நல்ல தீர்வு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும்;. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெற முடியும்.  புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய யோகமும் உண்டாகும்;.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சுய நட்சத்திரத்தில் சனி 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் நிங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். 2 இல் குரு வக்ர கதியிலும் 4 இல் இராகு இருப்பதாலும் தேவையற்ற அலைச்சல்,டென்சன் ஏற்படுமே தவிர தொழில் உத்தியோக ரீதியாக வெற்றிகள் தொடர்ந்தபடி இருக்கும்.பணவரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். இதனால் சாதகமான பலன்களைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது. நல்ல நட்புகளால் அனுகூலப்பலனையும் பெற முடியும். 

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
உங்கள் இராசிக்கு 6 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும் 05.07.2015 வரை குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். புதிய பூமி மனை, வண்டி வாகனம் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். உற்றார்  உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட லாபங்கள் சிறப்பாகவே இருக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.  பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுக்கல் வாங்கலும் லாபம் தரும். மாணவர்கள் கல்வியில் சற்றே ஈடுபாட்டுடன் செயல்படுவதும் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நல்லது.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  6 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 5 இல் சஞ்சரிக்க இருப்பதாலும். 3 இல் குரு சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பதவிகளைப் பெற முடியும். எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். கணவன் மனைவியிடையே சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் அனுகூலமாகவே அமைவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 7.10 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.குரு 3 இல் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபார ரீதியாக லாபங்கள் பெருகும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின் வெற்றி கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்களும் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில்  குரு 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் சிறு சிறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். பண வரவுகளில் சற்று நெருக்கடிகள் நிலவினாலும் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு இருக்கும்  நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். கணவன் மனைவியிடையே சிறந்த அன்யோன்னியமும் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களும் சிறு தடைக்கு பின் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். எதிரிகள் உங்களை கண்டு ஓடி ஒளிவார்கள். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். 

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 6 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 3 லும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் இராகு 3 ஆம் வீட்டில் வீட்டில் சஞ்சரிப்பதால்  பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்ககள் கௌரவமான நிலையினைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப் பளு குறையும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிட்டும்.உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியான நிலையினை பெற முடியும். கடன்களும் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
உங்கள் இராசிக்கு 6 இல் சனி வலுவாக சஞ்சரிப்பதும், இராகு 3 இல்; சஞ்சரிப்பதும்  உங்களின் பலத்தை அதிகரிக்கக் கூடிய அமைப்பாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை தடையின்றி பெற முடியும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு மூலம் எதிர்பார்த்த அனுகூலம் கிட்டும். குரு  4 இல் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். 

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசியாதிபதியான புதனின் சாரத்தில் சனியும், 3 இல் இராகுவும் சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கைகள் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களில் தாமத நிலை ஏற்பட்டாலும் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். குருபகவான் இக்காலங்களில் 4 இல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர் புகழ் கூடும். சமுதாயத்தில் உங்களுக்கென தனி மரியாதையும் உயரும். 

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 6 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும்  இராகு 3 இல் இருப்பதால்  பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளும் ப+ர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயர்வுகளை பெற முடியும்.  வீடுமனை போன்றவை வாங்கக் கூடிய யோகம் போன்ற யாவும் அமையும். கடன்களும் படிப்படியாக குறைந்து விடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமும் உங்கள் இராசிக்கு அதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 6 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 02.09.2017 முதல் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5 இல் சஞ்சரிப்பதால்  நினைத்தது நிறைவேறும். தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும்.  ப+மி, மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். ப+ர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகி பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்த போட்டிகளோ, மறைமுக எதிர்ப்புகளோ இன்றி எதையும் சமாளிப்பார்கள். 

மிருகசீரிஷம் 3,4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     தனக்குள்ள வேலைகளில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றியினைப் பெறும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சனி பகவான் ருண ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் தாராளமாகவே இருக்கும். கடன்கள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்திலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாவதோடு உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியுர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     நல்ல புத்திக் கூர்மையுடன் காரியத்தில் கண்ணாக விளங்கும் உங்களுக்கு சனி பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பாலும் வேலையாட்களின் ஆதரவாலும் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு மனை, கார், பங்களா போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும் பதவி உயர்வும் கிட்டும்.

புனர்பூசம் 1,2,3ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய இளகிய மனம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை; நிலவும். கணவன் மனைவியிடையே  அன்யோன்னியமும் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் கிட்டும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 5,6,7,8,14,15
கிழமை : புதன்,வெள்ளி
நிறம் : பச்சை, வெள்ளை
கல் : மரகதம்
திசை : வடக்கு
தெய்வம் : விஷ்ணு

11/12/14

சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம (2014 -2017)

சனி பெயர்ச்சி பலன்கள்  
ரிஷபம (2014 -2017)


ரிஷபம் , கார்த்திகை 2,3,4, ரோகினி, மிருக சீரிஷம் 1,2ம் பாதம்

தியாக மனப்பான்மையும் சுயநலமில்லாத குணமும், பெருந்தன்மையும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமான சனி பகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை உங்கள் ஜென்ம ராசிக்கு 7 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். சனி 7 இல் சஞ்சரிப்பது கண்ட சனியாகும். 

இக்காலங்களில் உங்கள் ஜென்ம ராசியையும், சுகஸ்தானமான 4 ஆம் வீட்டையும், பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டையும் பார்வை செய்கிறார். சனி 7 ல் சஞ்சரிப்பது கண்டச் சனி அமைப்பு என்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்காது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 4,9 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். பொருளாதார நிலையிலும் இடைய+றுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். சனி உங்கள் இராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் பெரிய கெடுதிகளை செய்ய மாட்டார். வீடுமனை, வண்டி வாகனங்களால் சுப செலவுகள் ஏற்படும். அடிக்கடி தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.

சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுகோள் என வர்ணிக்கப்படும் குருபகவான் 05.07.2015  வரை  3 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் சற்று அலைச்சல்கள், நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சுகஸ்தானமான 4 ஆம் வீட்டில் குரு சந்திப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு என்று கூறமுடியாது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் தேவையற்ற அலைச்சல்கள் சுக வாழ்வில் பாதிப்புகள் ஏற்படும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை பஞ்சம  ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இக்காலத்தில் தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் திருமண சுப காரியங்கள்  கைகூடும் வாய்ப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, புத்திர சிறப்பு, யாவும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் குறையும்.

உடல் ஆரோக்கியம்
     உடல் ஆரோக்கியமானது ஒரளவுக்கு சுமாராக இருக்கும். ஜென்ம ராசிக்கு 7 இல் சனி சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்வை செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இது கண்டச் சனி அமைப்பாகும். இதனால் உடல் நிலையில் சோர்வு கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் விரைந்து செயல்பட முடியாத அளவிற்கு மந்த நிலை ஏற்படும். மனைவியின் உடல் நிலையிலும் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை ஏற்படுத்தும் முன் கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. 

குடும்பம் பொருளாதார நிலை
     சனி ஜென்ம ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால் கணவன்  மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும்.; பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்று அனுகூலப்பலனை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் தோன்றும். புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங் கள் தோன்றி மறையும்.

உத்தியோகம்
     ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி 7 இல் சஞ்சரிப்பதால் உத்தியோக ரீதியாக எதிர் பார்க்கும் உயர்வுகள் சற்று தடைகளுக்குப் பின் கிட்டும். நீங்கள் நல்ல உழைப்பாற்றல் கொண்டவர்கள் என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன் பணி புரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் உங்களுக்குள்ள வேலைப்பளு குறையும். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதைக்  தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம்
     தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தைப் பெற முடியும். வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் சில நேரங்களில் தட்டிச் சென்றாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகளிடமும் உழைப்பாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்களை சந்தித்தாலும் லாபங்கள் குறையாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. அதிக உழைப்பு உடல் சோர்வை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை.

பெண்கள்
     பெண்களுக்கு உடல் நிலையானது சற்று சோர்வுடன் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியே இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணி புரியும் பெண்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

கொடுக்கல் வாங்கல்
     பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் பணம் கொடுக்கல்  வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர் சிறு சிறு விரயங்களையும் தேவையற்ற அலைச்சல்களையும் எதிர் கொள்ள நேரிடும்.

அரசியல்
     மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி சமசப்தம ஸ்தானமான 7ல் சஞ்சரிப்பதால் மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. உடனிருப்பவர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளை எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டி வரும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும்.

விவசாயிகள்
     மகசூல் சிறப்பாக இருக்கும். உங்களின் உழைப்பிற்கேற்ற பலனை அடைவீர்கள். காய், கனி, ப+ போன்றவற்றாலும் லாபம் கிட்டும். கால் நடைகளால் சிறு சிறு விரயங்களும் நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வீண் வம்பு வழக்குகளும் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். புதிய நவீனகரமான உபகரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். வேலையாட்கள் அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்
     கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்த்த இலக்கை அடைவதுடன் பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி சிறப்பாக இருக்கும் என்றாலும் நல்ல நட்புகளை தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது. விளையாட்டுப் போட்டிகளின் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு 8,11 இக்கு அதிபதியான  குருவின் நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் ஏற்படும்.  குரு  3 இல் வக்ர கதியிலும். கேது 11 லும் சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும். ராகு 5 இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் நிம்மதி குறைவு, ப+ர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்,உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும் கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட முடியும். 

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சொந்த நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு வக்ர கதியிலும், 11 இல் கேது  இருப்பதாலும் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளிய+ர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்க்கவும்.தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
சமசப்தம ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் கேது 11 லும்; சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும.; சற்றே அலைச்சல்கள், சுகவாழ்வில் சோதனைகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும்.கடன்கள் குறையும்.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  7 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 6 இல் சஞ்சரிக்க இருப்பதும் 11 இல் கேது  சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ப+ர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் ப+ர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளிய+ர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் கிட்டும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 8.11 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 7 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்;. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள்தடைகளுக்கு பின்; கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த ப+மி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.  ப+ர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள.; தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
உங்கள் இராசிக்கு தர்மகர்மாதிபதியான  சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு  4 ம் வீட்டிலும், 11 இல் கேதுவும் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சரளமான நிலை உண்டாகும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குரு 4ஆம் வீட்டிலும் சனி 7லும் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்று அமைப்பு என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்  கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறுப்பிரச்சனைகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது செல்லவும். புத்திர வழியில் மனக் கவலைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறமுடியும்.

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 7 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் தான் இருக்கும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சற்று மந்தமாக இருந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே ஈடுபட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்றே மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் தேக்க நிலை ஏற்படாது.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு  5 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கடந்த காலங்களில் இருந்த தேவையற்ற பிரச்சினைகள் குறையும். பண வரவுகளும் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். பொன் பொருள் சேரும்.  முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் எல்லா வகையிலும் அனுகூலமான பலனைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 2.5 இக்கு அதிபதியான  யோககாரகன் புதனின்  நட்சத்திரத்தி;;ல் சனியும், 5 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவில் நெருக்கடிகள் விலகும்.பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும்.திருமண சுபகாரியங்களை நிறைவேற்றும் வாய்ப்பும் அமையும்.  நெருங்கியவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபத்தினை பெறுவர். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளை பெறுவர்.

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 7 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும். குரு 5 லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைப் பளு குறையும். குடும்பத்திலும் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மட்டும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். சிலருக்கு வீடு மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும்; யோகம் உண்டாகும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் 7 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில்  இராகு 3 இல் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.பண வரவுகளும் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். எடுக்கும் காரியங்களில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமானப் பலனை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறைந்து மந்த நிலை விலகும். 02.09.2017 இல் ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின் மூலம் குரு 6 இல் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற பிரச்சனைகளால் குழப்பங்கள்; உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
மற்றவர்களின் மனதை துல்லியமாக எடைபோட்டுப் பழகக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
கடுமைனான உழைப்பாற்றலும் நல்ல பண்புகளையும் கொண்ட உங்களுக்கு சனி 7ல்  சஞ்சரிப்பதால் கண்டச் சனி நடைபெறுகிறது. இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற முடியும் என்றாலும் உங்கள் ராசியாதிபதிசுக்கிரனுக்கு சனி நட்பு கிரகம் என்பதால் தேவையற்ற  வீண் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிருகசீரிஷம் 1,2ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
நல்ல பொறுமையும், எதிலும் திறமையுடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7இல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பல்ல. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிட்டும். வேலைப் பளுவும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 5,6,7,8,14,15,16
கிழமை : வெள்ளி, புதன்
நிறம் : வெள்ளை, பச்சை
கல் : வைரம்
திசை : தென்கிழக்கு
தெய்வம் : லட்சுமி

11/11/14

சனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம் ( 2014 -2017 )

சனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம் ( 2014 -2017 )


மேஷம் :- அஸ்வினி பரணி கிருத்திகை-1ம் பாதம்

நிமிர்ந்த நடையும் கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே !உங்கள் ஜென்ம இராசிக்கு 10,11 க்கு அதிபதியான சனிபகவான்; வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை அஷ்டம ஸ்தானத்தில சஞ்சாரம் செய்யவிருப்பதால் அஷ்டம சனி நடைபெறவுள்ளது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாவதுடன் உற்றார் உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளால் மனசஞ்சலங்கள் ஏற்படும்.நீங்கள்  நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களாலும் வீண் பழிகளைச் சுமக்க வேண்டிவரும். தேவையற்ற கடன்களும் உண்டாகும்.

சனி 8 ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை உங்கள் இராசிக்கு 9,12க்கு அதிபதியான குரு பகவான் சுகஸ்தானமான 4 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையும் தேவையற்ற அலைச்சல்களும் உண்டாகும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு பஞ்சம ஸ்தானமான 5 ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் சனியால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் சற்று குறைந்து குடும்பத்தில் ஒற்றுமை, சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பொருளாதார உயர்வு, கடன்கள் குறைய கூடிய அமைப்பு உண்டாகும். 02.08.2016 முதல் 2.09.2017 வரை ருண ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக  எதிர்ப்புகள்  ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. 02.09.2017 முதல் 04.10.2018 வரை குரு சமசப்தம ஸ்தானமான 7 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து நட்புகரம் நீட்டுவார்கள்.

உடல் ஆரோக்கியம்
உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8 ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடல் நிலையில் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை உண்டாகும். ஏதாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரம்
கணவன் மனைவியிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும். தேவையற்ற வாக்குவாதங்களால் உற்றார் உறவினர்களிடையேயும் பகைமை உண்டாகும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆடம்பர செலவுகள் செய்தால் கண்டிப்பாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவீர்கள். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குரு சாதகமாக சஞ்சரிக்கும் காலங்களில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருப்தியான மண வாழ்க்கையும் அமையும். பொன் பொருள் சேரும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

உத்தியோகம்
பணியில் அவ்வளவாக நிம்மதியிருக்காது என்ன தான் பாடுபட்டாலும்  திறமைகளை வெளிபடுத்த முடியாதபடி தடைகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வார்கள். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்களும் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அடிக்கடி உடலில் பாதிப்புகள் உண்டாவதால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியிலிருக்கும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். எதிர்பார்க்கும் வங்கி கடனுதவிகளும் சற்று தாமதப்படுவதால் நவீன கருவிகளை  வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாது. வரும் வாய்ப்புகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்;. வெளிய+ர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் அதனால் லாபங்கள் ஏற்படாது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும்.

பெண்கள்
உடல் ஆரோக்கித்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். தேவையற்ற வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற்றாலும் ஆடம்பர செலவுகளைச் குறைப்பதால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். பணி புரிபவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். பண விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபமே அமையும்.

அரசியல்
பெயர், புகழைக் காப்பாற்றிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களையும் சரிவர செய்து முடிக்க விடாமல் உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் மட்டுமே அவர்களின் செல்வாக்கினைப் பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.

விவசாயிகள்
விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் அதற்காக அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். புழு ப+ச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகளும் உண்டாகும். உழைப்பிற்கான பலன்களை அடைய முடியாது. சந்தையிலும் விளை பொருள்களுக்கேற்ற விலைகள் சுமாராகத்தான் கிடைக்கும். கால்நடைகளால் மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் ரளவுக்கு அனுகூலமான பலன்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும்.

மாணவ மாணவியர்
மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். உடல் நல பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாவதால் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பதும் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவதும் நல்லது.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான குருவின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான்  சஞ்சரிக்கும் இக்காலத்தில் 4 இல் குரு சஞ்சாப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழிச் சொற்கள் உண்டாகும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சொகுசு வாழ்விலும் பாதிப்பு ஏற்படும். இராகு 6 இல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குரு பார்வை சனிக்கு இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
சனி தனது சொந்த நட்சத்திரத்தில் 8 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில், குரு வக்ர கதியிலும்,இராகு 6 லும் சஞ்சரிப்பதால்   எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெற்று  எதையும் சமாளிப்பிர்கள். எடுக்கும் முயற்சிகளில் சில தடை களுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு நற்பலனை பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில்  சோர்வு  மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சிறப்புடன் செயல்பட முடியும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது..பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் வியாபரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.  கூட்டுத் தொழில் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
அஷ்டம ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்ரிப்பதாலும், இராகு 6 இல்  இருப்பதாலும்; தேவையற்ற பிரச்சனைகள் விலகி அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். பண வரவிலிருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பதும்  உற்றார் உறவினர்களை அனுசரித்து  செல்வதும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை.  கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  8 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 7 இல் சஞ்சரிக்க இருப்பதும் குரு பஞ்சம ஸ்தானமான 5 ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்பதமான அமைப்பு ஆகும். உங்களுக்கு இருந்த எல்லாப் பிரச்சினைகளும் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.;. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன்கள் தேடி வரும். பணவரவுகளிலிருந்த பிரச்சனைகள் குறைந்து கடன்களும் படிப்படியாக நிவர்த்தியாகும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை விலகும். கூட்டாளிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். ப+ர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான உயர்பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 9,12 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 8 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் குரு  5 ம் வீட்டிலும், 6இல் இராகுவும் இருப்பதால்  உறவுகளிடையே இருந்த பகைமை படிப்படியாக விலகும். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். திருமண சுப காரியங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்று குறையும். கூட்டாளிகளை அனுசரிப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களாலும் லாபங்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வண்டி வாகனங்களில்  பயணம் செய்யும் போது கவனமுடனிருப்பது நல்லது.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் சஞ்சரித்து அஷ்டமசனி நடைபெற்றாலும் இக்காலத்தில் குரு  5 ம் வீட்டிலும், 6 இல் இராகுவும் இருப்பதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். என்றாலும் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலையும் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலிலும் சிறப்பான லாபம் அமையும்.  உற்றார் உறவினர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். மற்றவர்களிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது போன்றவற்றால் தேவையற்ற பிரச்சனைகள் குறையும்.

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 8 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 5 லும், கேது 11 ஆம் வீட்டிலும், சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களின் நிலை உயரும்..  எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் தன வரவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் உத்தமம். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடன்களும் படிப்படியாக நிவர்த்தியாகும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை  மேற்கொண்டால் நற்பலன் அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
அஷ்டம ஸ்தானத்தில் சனியும் 6 இல் குருவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் இடைய+றுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நிம்மதி குறையும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். பணம்  கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகளும் அலைச்சல் டென்ஷனும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்ளவது நல்லது. பணவரவுகளில் இடையூறுகள் நிலவுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்குவீர்கள்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 3,6 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 6 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். லாபங்கள் குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. 11இல் கேது இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையகூடும் என்பதால் எதிலும் விட்டு கொடுத்து நடப்பதும் நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 8 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும்  கேது 11 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் எதிர்பாராத விரயங்களும் ஏற்படும். பிறரை நம்பிவாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையகூடும் என்பதால் எதிலும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது.  எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்த்து கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு வேலைப்பளுவும் அலைச்சல், டென்ஷனும் அதிகரிப்பதால் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டு அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் உடல் ரீதியாக சில உபாதைகள் ஏற்படும் என்றாலும் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 02.09.2017 முதல் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல் வாங்கலிருந்த பிரச்சனைகள் குறையும். எல்லா வகையிலும் ஏற்றங்களை ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகளும் மறைமுக எதிர்பார்ப்புகளும் விலகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். 

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     அமைதியான குணமும் நல்ல அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் அஷ்டம ஸ்தானமான 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிப்பதால் வாய்ப்புகள் கைநழுவும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     மற்றவர்களை கவரக் கூடிய கவர்ச்சியான உடலமைப்பும், சிந்திக்கவைக்கும் பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் 8 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தாமதப்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவில் நெருக்கடிகள் ஏற்படும்.

கிருத்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
     முன் கோபம் அதிகமிருந்தாலும் மிகவும் சாந்தமான குண அமைப்பு கொண்ட உங்களுக்கு சனி பகவான் 8 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அனைவரையும் அனுசரித்து செல்ல பழகிக் கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படவும்.

அதிர்ஷ்டம் தருபவை
தேதி : 1,2,3,9,10,11, 12
கிழமை : செவ்வாய், ஞாயிறு
நிறம் : சிவப்பு, மஞ்சள்
கல்       :    பவளம்
திசை : தெற்கு
தெய்வம் : முருகன்